ஜார்க்கண்ட்-17ம் தேதி பதவியேற்கும் மதுகோடா
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக சுயேச்சை எம்.எல்.ஏ. மது கோடா 17ம் தேதி பதவியேற்கிறார்.
ஜார்க்கண்ட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாஜக முதல்வர் அர்ஜுன் முண்டா அமைச்சரவையில் இருந்தநான்கு சுயேச்சை அமைச்சர்களும் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இதையடுத்து முண்டா அரசு பெரும்பான்மைபலத்தை இழந்தது.இதையடுத்து அர்ஜூன் முண்டா சட்டசபையில், இன்று நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல செய்தார்.நேற்று தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆட்சியைக் காப்பாற்றும் வகையில், 3 சுயேச்சைஎம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் இந்தர் சிங் நாம்தாரி மூலமாக முண்டா அரசு முயன்றது.
ஆனால் பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், 3 சுயேச்சை எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் குறித்தமுடிவை திடீரென ஒத்தி வைத்தார். இதனால் முண்டா அரசு நம்பிக்கை தீர்மானத்தில் தோற்பது உறுதியானது.
இந்த நிலையில் நம்பிக்கை தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடுவதற்கு முன்பாகவே அர்ஜூன் முண்டா, தனது அரசுபதவி விலகுவதாக சட்டசபையில் அறிவித்தார். தொடர்ந்து ஆளுநரை சந்தித்து தனது அமைச்சரவையின்ராஜினாமா கடிதத்தை வழங்கினார். சபாநாயகர் நாம்தாரியும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் கூடி புதிய முதல்வரைதேர்ந்தெடுத்தனர். புதிய முதல்வராக சுயேச்சை எம்.எல்.ஏ. மது கோடா தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து மது கோடா ஆளுநர் சையத் சிப்தி ரஸியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தன்னைஆதரிக்கும் எம்.எல்.ஏக்களின் பட்டியலையும் அவர் ஆளுநரிடம் வழங்கினார். மொத்தம் 41 எம்.எல்.ஏக்களின்பட்டியலை அவர் கொடுத்துள்ளார். மேலும் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதம் விரைவில் வழங்கப்படும்எனவும் அவர் ஆளுநரிடம் தெரிவித்தார்.
மது கோடாவின் கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், அரசியல் சட்டப்படி விரைவில் நடவடிக்கை எடுப்பதாகதெரிவித்தார். மது கோடாவுடன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன், மத்திய அமைச்சர்கள் லாலுபிரசாத் யாதவ், பிரேம் சந்த் குப்தா, காங்கிரஸ் எம்.பி. புர்கான் அன்சாரி உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
மது கோடா வருகிற 17ம் தேதி புதிய முதல்வராக பதவியேற்கிறார். அன்றே புதிய அமைச்சரவையும்பதவியேற்கும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications