அய்யோ.. நான் அப்படி சொல்லலை: கார்த்திக்
சென்னை:
ஜெயலலிதா மன்னிப்பு கேட்டால்தான் அதிமுகவுடன் கூட்டணி வைப்பேன் என்றுநான் சொல்லவே இல்லை. அப்படி நான் கூறியதாக வெளியான அறிக்கையை நான்வெளியிடவே இல்லை என்று நடிகர் கார்த்திக் திடீரென மறுத்துள்ளார்.
இதனால் அவர் மிரட்டப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் பத்திரிக்கையாளர்கள்மத்தியில் ஏற்பட்டுள்ளது.பார்வர்ட் பிளாக் தலைவரான நடிகர் கார்த்திக் பெயரில் சமீபத்தில் ஒரு அறிக்கைவெளியானது. அவரது அலுவலக பேக்சில் இருந்து அவரது லெட்டர் பேடிலேயேஅந்த அறிக்கை வந்தது.
அதில், கடந்த காலங்களில் தான் செய்த தவறுக்கு ஜெயலலிதா மன்னிப்பு கேட்கவேண்டும். போயஸ் தோட்டத்தில் எனக்கும், அகில இந்திய பொதுச் செயலாளர்பிஸ்வாஸுக்கும் நடந்த அவமானத்தை நான் இன்னும் மறக்கவில்லை.
எனவே அவர் மன்னிப்பு கேட்டால்தான் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன்,பார்வர்ட் பிளாக் கூட்டணி வைக்கும் என கார்த்திக் கூறியிருந்தார்.
ஆனால் இந்த அறிக்கையை இப்போது அவர் மறுத்துள்ளார். செய்தியாளர்களைசந்தித்த கார்த்திக் கூறுகையில்,
ஜெயலலிதா என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நான் கூறியதாக எனதுபெயரில் அறிக்கை வெளியாகியுள்ளது. உண்மையில் அந்த அறிக்கையை நான்வெளியிடவில்லை.
அந்த அறிக்கையை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். நானோ எனதுஅலுவலகத்திலிருந்தோ இதை யாரும் கொடுக்கவில்லை. இது ஒரு பொறுப்பற்றஅறிக்கை. இதை நான் கொடுக்கவில்லை என்று உறுதியாக கூறுகிறேன்.
எனது தொழில் மீது ஆணையாக இந்த அறிக்கையை நான் கொடுக்கவில்லை. எனதுபெயரை பயன்படுத்தி யாரோ தவறாக இப்படி ஒரு அறிக்கையைவெளியிட்டுள்ளனர். விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக (என்னாது??) யாரோமோசடி செய்து எனது பெயரில் அறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
இது மிகவும் தவறான, பொறுப்பில்லாத, மோசடி செயலாகும். இந்த தவறைசெய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் மீது போலீஸில்புகார் கொடுக்கவுள்ளேன்.
எனது பேக்ஸ் எண்ணிலிருந்து இது கொடுக்கப்பட்டுள்ளதால் உரிய முறையில்விசாரணை நடத்த போலீஸை கோரவுள்ளேன்.
மிகப் பெரிய இயக்கத்தின் மதிக்கப்படக் கூடிய தலைவர் ஜெயலலிதா. அவரைமன்னிப்பு கேட்கச் சொல்ல நான் யார்? நான் அனைத்துத் தலைவர்களையும்மதிக்கிறேன். இதுபோன்ற வார்த்தைகளை நான் ஒருபோதும் பயன்படுத்துவதில்லை.எல்லோரும் எனக்கு வேண்டும். யாரையும் நான் எதிரியாக நினைத்ததில்லை.
விரைவில் யார் இந்த தவறை செய்தது என்பதை கண்டறிந்து வெளிப்படுத்துவேன்.இந்த அறிக்கை வெளியான பின்னர் அதிமுகவிலிருந்து யாரும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. நான்தான் எனது கட்சியினரிடம் இதுகுறித்து விசாரித்தேன்.
இதையெல்லாம் பார்க்கும்போது அரசியலை விட்டே போய் விடலாமா என்று கூடத்தோன்றுகிறது. ஒரு சிலர் இப்படி இருப்பதால் பெரும்பாலான மக்களை கைவிட்டுவிடக் கூடாது என்பதற்காக பொறுத்துக் கொள்கிறேன்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வருமா என்பது குறித்து கூறமுடியாது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். விரைவில் கட்சியின் மாநில குழுக்கூட்டம் மதுரையில் கூடுகிறது. அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்கார்த்திக்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications