சானியா மிர்ஸா: தொடரும் சறுக்கல்கள்
மும்பை:
எனது ஆட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை. இது ஒரு பெரியபிரச்சனை இல்லை. இது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய சறுக்கல் தான் என சானியா மிர்ஸா கூறியுள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா கடந்த ஆண்டில் சர்வதேச டென்னிஸ் அரங்கில் தனதுஅசத்தலான ஆட்டத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். உலக தர வரிசையில் 33வது இடத்துக்குமுன்னேறினார்.ஆனால் இந்த ஆண்டு சானியாவுக்கு அடிக்கடி காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவரது ஆட்டத்தில் சறுக்கல்ஏற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்ஸா 2வது சுற்றிலேயேதோல்வி கண்டு வெளியேறினார்.
சர்வதேச போட்டிகளில் முன்பு போல ஜொலிக்க முடியாமால் தவிக்கும் சானியா மிர்ஸா சமிபத்தில் வெளியிட்டஉலக தர வரிசையில் 70வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சானியா கூறுகையில்,
முதல் ஆண்டிலேயே நான் உலக தர வரிசையில் முன்னேற்றம் கண்டது மகத்தானது. ஆனால், அதே போன்றுஅடுத்த ஆண்டுகளிலும் முன்னேற்றம் காண்பது முடியாத காரியம். அதே நேரத்தில் வரும் காலங்களில் நல்லநிலையை எட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.எனது ஆட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை. இது ஒரு பெரியபிரச்சனை இல்லை. இது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய சறுக்கல் தான்.
ஆசிய விளையாட்டு போட்டியில் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் லியாண்டர் பயஸ்சுடன் இணைந்து ஆடுவதுதேர்வு கமிட்டியின் முடிவாகும். அது எனது தேர்வு கிடையாது. லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி அல்லதுயாருடன் இணைந்து ஆடினாலும் எனக்கு மகிழ்ச்சி தான் என அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications