வீரப்பனுக்கு ஆயுதம்: 2 பேருக்கு 4 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

பவானி:

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதம் வழங்கிய வழக்கில் 2 பேருக்கு தலா 4 ஆண்டுகடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கிணத்துக்குளிப்பட்டி என்ற இடத்தில் கடந்த 1993ம்ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வீரப்பன் கும்பலுக்கு ஆயுதங்களை கடத்திச் சென்றது.இதையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் எஸ்.பி. சஞ்சய் அரோரா தலைமையில்அங்கு விரைந்து சென்று தாக்குதல் நடத்தினர்.

இதில் கனகராஜ் உள்ளிட்ட 16 பேர் சிக்கினர். மற்றவர்கள் தப்பி விட்டனர். இவர்களில்கனகராஜ் உள்ளிட்ட 12 பேருக்கு தலா 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்துபவானி விரைவு நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது.

ஜாமீனில் வெளியே வந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தவிஜயக்குமார், மூர்த்தி, சிவனய்யா ஆகியோரை போலீஸார் பின்னர் கைது செய்துபவானி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் மூர்த்தியை விடுதலை செய்துஉத்தரவிட்டது. மற்ற இருவருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+