கருணாநிதிக்கு ஜி.கே.மணி, சுதர்சனம் ஐஸ் ஐஸ்/ஞ>
சென்னை:
நூறு நாள் சாதனையின் அடிப்படையில் பார்த்தால் சிறந்த முதல்வர் வரிசையில் முதல்வர் கருணாநிதி முதல் இடம்பிடிப்பார் என பாமக தலைவர் ஜிகே.மணி கூறியுள்ளார்.
படப்பையை அடுத்த கரசங்கால் சமத்துவபுரத்தில் கருணாநிதி தலைமையில் நடந்த இலவச கலர் டிவி வழங்கும்திட்ட தொடக்க விழாவில் மணி பேசுகையில்,தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. ஆளுங் கட்சியானால் சட்டசபையில் ஆளுநர்உரையில், நிதிநிலை அறிக்கையில் வாக்குறுதிகளைத் தரும். ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதஇந்த காலத்தில் சொன்னதை மட்டுமின்றி, சொல்லாததையும் நிறைவேற்றும் முதல்வரை பெற்றிருக்கிறோம்.
கேட்காததையும் அவர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நூறு நாள் ஆட்சியிலேயே ஏராளமான சாதனைகளைச்செய்துள்ளார். இன்று இங்கு வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா, நாளை மறுநாள் நிலமற்றவிவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் விழா.
முதல்வரிடம் பேசிக் கொண்டிருந்த போது 18ம் தேதி கூட இன்னொரு தொழில் நிறுவனத்துடன் ஒப்பந்தம்போடவிருப்பதாகச் சொன்னார். இப்படி மக்களுக்காக சிந்திக்கும் முதல்வராக அவர் இருக்கிறார். பஞ்ச பூதங்கள்என்கிறோம். ஐந்து விரல்கள் எனக் சொல்கிறோம். ஐந்து என்றாலே சிறப்புதான்.
ஐந்தாவது முறையாக கருணாநிதி முதல்வராகி இருக்கிறார். அவருடைய இந்த ஆட்சிக்காலம் இந்தியாவுக்குஎடுத்துக்காட்டான் காலம், பொற்காலம், ஊடகங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில், சிறந்த முதல்வர் வரிசையில் நம்முதல்வருக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.
மூன்று இடங்களைப் பிடித்த முதல்வர்களின் நூறு நாள் சாதனைகளை ஒப்பிட்டால், நம் முதல்வர்தான் முதல்இடத்தைப் பிடிப்பார். பெரியாராக, கர்மவீரர் காமராஜராக முதல்வர் கருணாநிதி இருக்கிறார்.
நிதி ஆதாரம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்த நிலை இருந்தது. ஆனால் இப்போது உள்ளாட்சித் துறைஅமைச்சர் முக.ஸ்டாலின் எல்லா இடங்களுக்கும் செல்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு உள்ளாட்சிஅமைப்புகளுக்கு நிதி இருக்கிறது. திட்டங்களைத் தாருங்கள் என்று கூறி வருகிறார். தமிழக உள்ளாட்சிஅமைப்புகளைப் பார்த்து பெருமைப்படச் செய்துள்ளார் என்றார்.
காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் பேசுகையில்,
தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதற்காக முதல்வர்கருணாநிதி இரவு பகல் பாராமல் ஓயாது உழைத்து வருகிறார். இன்று கலர் டிவி வழங்கும் விழா நடக்கிறது.நாளை மறுநாள் ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு இலவசமாக 2 ஏக்கர் நிலம் வழங்கப்படுகிறது.
திமுக ஆட்சியின் சாதனைகளை எதிர்க்கட்சியினர் கூட பாராட்டுகிறார்கள். மனசாட்சி உள்ளவர்கள்பாராட்டுகின்றனர். இதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் குறை சொல்லிகிறார்கள்.
இதுவரை உறங்கிக் கொண்டிருந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் எழுந்துஓடிக்கொண்டிருக்கிறது.
தோழமைக் கட்சிகளாகிய நாங்கள் என்றும் உங்களுடன் இருப்போம். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன்சோனியா பிரதமராக வர வேண்டும் என்று முதன்முதலில் கோரிக்கை வைத்தார் கருணாநிதி. அவரை தந்தையாகசோனியா நினைக்கிறார். யார் வந்தாலும், போனாலும் நாங்கள் என்றும் உங்களுடன் இருப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications