20ம் தேதி திமுக கூட்டணி தலைவர்கள் கூட்டம்
சென்னை:
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக விவாதிக்க வருகிற 20ம் தேதி திமுக கூட்டணிக் கட்சிகளின்தலைவர்கள் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி கூட்டியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி, பதில் பாணி அறிக்கையில் கூறியிருப்பதாவது:மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக வருகிற 20ம் தேதி மாலையில், ஜனநாயக முற்போக்குக்கூட்டணி சார்பில் திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும கலந்து பேசுவதாக இருக்கிறோம்.
அதன் விவரங்களை மறுநாள் 21ம் தேதி காலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுத்துச் சொல்லிதொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபடுவோம்.ஆளுங்கட்சியாக இருந்தபோது 24 மணி நேரம் உழைத்தாக கூறினார் ஜெயலலிதா.
இப்போது எதிர்க்கட்சியான பிறகும் கூட அவர் 24 மணி நேரம் உழைக்க வேண்டியிருப்பதால் அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்க அவருக்கு நேரம் இல்லாமல் போய் விட்டது போலும்.
ஜெயலலிதாவிடமிருந்து காளிமுத்துவை பிரிக்க யார் நினைத்தார்கள்? காளிமுத்துவை ஜெயலலிதா பிரித்துவிடாமல் இருந்தால் சரி.
அதிமுகவினருக்கு போராட்டம் நடத்த காரணம் கிடைக்கவில்லை. அதனால் தான் சிக்குன் குனியாவை வைத்துபோராட்டம் நடத்தியுள்ளனர். என்ன செய்வார்கள் பாவம்.
தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னதை செய்யவில்லை என்று கூறி போராட்டம் நடத்த முடியாது. கோப்புகள்கையெழுத்திடாமல் தேங்கிக் கிடக்கிறது என்று கூறியும் போராட்டம் நடத்த முடியாது. சட்டம் ஒழுங்கு கெட்டுக்கிடக்கிறது என்றும் போராட்டம் நடத்த முடியாது.
இப்படி எதையும் சொல்லி போராட்டம் நடத்த முடியாது. காரணம் திமுக அளித்த வாக்குறுதி அத்தனையும்நிறைவேற்றப்படுவதாக ஏடுகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் எதையாவது செய்தாகவேண்டுமே, இல்லாவிட்டால் ஜெயலலிதாவால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால் தான் இந்த சிக்குன்குனியா போராட்டம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications