இஸ்லாம் குறித்த கருத்து: போப் வருத்தம்-மன்னிப்பு கேட்க முஸ்லீம் நாடுகள்வலியுறுத்தல்!
வாடிகன் சிட்டி:
நபிகள் நாயகம் குறித்தும், இஸ்லாம் மதம் குறித்தும் தெரிவித்த கருத்துக்காகபோப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் போப் பகிரங்கமன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு முஸ்லீம் நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் தனது சொந்த நாடான ஜெர்மனியில் கடந்தசெவ்வாய்க்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பவேரியா மாநிலத்தில் நடந்தநிகழ்ச்சியொன்றில் நபிகள் நாயகம், இஸ்லாமிய மதம், புனிதப் போர் (ஜிஹாத்)குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.போப்பாண்டவர் இஸ்லாம் மத்தை அவமதித்து விட்டதாக இஸ்லாமிய நாடுகள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளன. அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனஅவை கோரி வருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் போப்புக்கு எதிராகமுஸ்லீம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து போப்பாண்டவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வாடிகன் நகர செயலாளர் கர்டினால் டர்சிசியோ பெர்டோன்வெளியிட்டுள்ள அறிக்கையில், 14வது நூற்றாண்டில் வாழ்ந்த சக்கரவர்த்திமானுவேல், இஸ்லாம் மதம் குறித்த தெரிவித்த கருத்துக்களை உள்நோக்கத்துடன்போப் மேற்கோள் காட்டிப் பேசவில்லை.
தனது பேச்சு இஸ்லாமியர்களுக்கு வருத்தம் தருவதாக இருப்பதாக கூறப்படுவதால்,தனது பேச்சுக்காக போப் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் மதத்தின் மீதும், இஸ்லாமின் மீது நம்பிக்கை வைத்திருப்போரையும் போப்மதிக்கிறார். அவரது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக போப் கருதுகிறார்.
வன்முறைக்கு மதம் களமாக பயன்படக் கூடாது என்பதை மட்டுமே போப் சொல்லவந்தார். அது எந்த மதமாக இருந்தாலும் வன்முறைப் பாதைக்கு மதத்தை துணைக்குஅழைக்கக் கூடாது என்பதைத்தான் போப் கூறினார் என்று கூறியுள்ளார் பெர்டோன்.
ஆனால் போப்பின் வருத்தம் முஸ்லீம்களிடையே திருப்தியை அளிக்கவில்லை என்றுதெரிகிறது. பல்வேறு முஸ்லீம் நாடுகள் போப் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என கோரியுள்ளன. போப்புக்கெதிரான போராட்டங்களும் வேகம் பிடிக்கஆரம்பித்துள்ளன.
துருக்கி பிதரமர் தயீப் எர்டோகன் இதுகுறித்து கூறுகையில், போப்பின் கருத்துக்கள்மிகவும் அசிங்கமானவை, அறுவறுப்பானவை. உடனடியாக அதை போப் வாபஸ்பெற வேண்டும் என்று கூறியுள்ளார். போப் நவம்பர் மாதம் துருக்கி செல்லதிட்டமிட்டுள்ளார். ஆனால் தற்போதைய நிலையில் அவர் அங்கே செல்வாரா என்பதுகேள்விக்குறியாகியுள்ளது.
எகிப்து நாடு வாடிகன் நகருக்கான தனது தூதரை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது.செளதி அரேபியாவைச் சேர்ந்த மதகுரு சல்மான் அல் ஓதே போப் கருத்துக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம்கள்தான் வன்முறைக்கும், தீவிரவாதத்திற்கும் காரணம் என போப் எப்படிகூறலாம்? கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள்தான் இன்று இஸ்லாமிய உலகைகுறி வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதுவும் ஒரு வகையில் தீவிரவாதம் தான். ஆப்கானிஸ்தானை தாக்கியது யார்?ஈராக்கில் ஊடுறுவியிருப்பது யார்? இதற்கு போப் என்ன பதில் சொல்வார்? என்றுஆவேசமாக கேட்டுள்ளார்.
முஸ்லீம் நாடான மொராக்கோவும் வாடிகனுக்கான தனது தூதரை திரும்பப்பெற்றுள்ளது. போப் கருத்து கடுமையானவை என்று அது தெரிவித்துள்ளது. போப்வருத்தம் தெரிவித்திருப்பது திருப்தியாக இல்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்என மொராக்கோ நாடாளுமன்றம் கோரியுள்ளது.
இதுகுறித்து மெராக்கோ துணை பிரதமர் முகம்மது ஹபீப் கூறுகையில், மிகப் பெரியகுற்றத்தை போப் இழைத்துள்ளார். பொது மன்னிப்பு கேட்பதன் மூலம் மட்டுமே இந்தகுற்றத்தை திருத்திக் கொள்ள முடியும் என்றார் ஹபீப்.
ஆனால் போப்பின் கருத்துக்கு ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கல் ஆதரவுதெரிவித்துள்ளார். மதங்களுக்கிடையே பரஸ்பர பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்என்பதைத்தான் போப் சொல்லியுள்ளார் என்றார் மெர்கல்.












Click it and Unblock the Notifications