5 ஆண்டுகளில் அனைவருக்கும் நிலம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:

இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அத்தனை ஏழைகளுக்கும் நிலம் வழங்கப்படும் என்று முதல்வர்கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக அரசின் 2 ஏக்கர் நில திட்டத்தை பெரியார் பிறந்த நாளான நேற்று திருவள்ளூரில் முதல்வர் கருணாநிதிதொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டகருணாநிதி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்த நாள் இன்ப நாள். இந்த நிகழ்ச்சிக்கு ஈடு இணை, எதுவும் இல்லை. இதுஒரு வரலாற்றுச் சிறப்ப மிக்க திட்டமாகும். நிலமில்லாத ஏழைகளுக்கு முடிந்த வரையில் நிலங்களை வழங்கிவருகிறேன்.

திமுக அரசின் தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. இலவச நலத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாகஅரசுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு இல்லாத, 6881 ஏக்கர் தரிசு புறம்போக்கு நிலங்கள் வழங்கப்படுகின்றன.அதேபோ பண்படுத்தப்பட்ட 5076 ஏக்கர் நிலங்கள் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.

இது தவிர அரசுக்குச் சொந்தமான, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 10,566 ஏக்கர் தரிசு புறம்போக்கு நிலம், நிலமற்ற16,083 சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 5790 சிறு குறு விவசாயிகளுக்கு சொந்தமான 8881 ஏக்கர்தரிசு நிலங்களை அரசு செலவில் பண்படுத்தி திரும்பவும் அவர்களுக்கே வழங்கப்படுகிறது.

இன்று மட்டும் தமிழகத்தில் 24,949 ஏழை விவசாயிகளுக்கு 26,321 ஏக்கர் நிலங்கள் பண்படுத்ப்பட்டுஅளிக்கப்படுகிறது. பண்படுத்துவது என்றால் முள் புதர்களை அகற்றுவது, கற்களை அகற்றுவது, சமப்படுத்துவது,ஆள்துளைக் கிணறு அமைத்துக் கொடுப்பது, மரக் கன்றுகள், பயன் தரும் பழ வகை செடிகளை நடுவதுபோன்றவை ஆகும்.

இத்திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள நிலங்களைப் பார்த்தேன். இந்தமாவட்டத்தில் 649 ஏக்கர் பண்படுத்தப்பட்ட, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 588 ஏக்கர் நிலம் சீர்படுத்த ரூ. 42 லட்சம்செலவிட்டுள்ளனர். இதில் எந்த சுய லாபமும் கிடையாது.

இந்த நிலத்தில் புஞ்சை பயிரிட்டால் ஆண்டுக்கு ரூ. 5000, மாஞ்செடிகளை வைத்தால் ஆண்டுக்கு ரூ. 10,000கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்தத் திட்டம் தொடர்பாக மேற்கு வங்கத்திற்கு சென்று ஆய்வு நடத்திய தமிழக குழுவினர் திரும்பியுள்ளனர்.அங்கு கடந்த 10 வருடமாக ஆண்டுதோறும் அரசு நிலத்தை ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்து தருவதாக கூறினர்.அதேபோல தமிழகத்திலும் 5 ஆண்டு காலத்திற்குள் நிலமில்லாத அனைத்து ஏழைகளுக்கும் நிலம் வழங்கப்படும்.

இச் சாதனைத் திட்டத்தை சிலர் கேலி செய்கின்றனர். எதிர்த்துப் பேசுவதும், கேலி பேசுவதும்தான்எதிர்க்கட்சிகளின் வேலையாகி விட்டது. எதிர்ப்பு இல்லாமல் வளர முடியாது. எதிர் நீச்சல் போட்டு வளர்ந்தஇயக்கம் திராவிட இயக்கம். பெரியார் எதிர் நீச்சல் போட்டவர்.

நாங்களும் கரையேறுவோம், தமிழக மக்களையும் கரையேற்றுவோம் என்றார் கருணாநிதி. முன்னதாக தமிழகஅரசு இலவசமாக வழங்கிய நிலம் ஒன்றில் முதல்வர் கருணாநிதி மரக் கன்று ஒட்டை நட்டு வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

10 லட்சம் குடும்பங்களுக்கு காஸ் அடுப்பு:

இதற்கிடையே பொங்கல் தினத்தன்று 10 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்புடன், காஸ்அடுப்பு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளின் மாநாடு நடைபெற்றது.முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், தலைமைச் செயலாளர் திரிபாதி, அமைச்சர்கள்,அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றி கருணாநிதி பேசுகையில், இன்னும் ஐந்து ஆண்டுகளில் அடிப்படை வசதிகள்இல்லாத கிராமங்களே தமிழகத்தில் இல்லை எனும் நிலைமை ஏற்படும். அதற்கான பணிகள் உறுதி செய்யப்பட்டுநிறைவேற்றப்படும்.

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று 10 லட்சம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்புடன்,கூடிய காஸ் அடுப்பு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படும். இத்திட்டத்திற்காக தற்போது ரூ. 150 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில், 172 வாக்குறுதிகள்அளிக்கப்பட்டன. அவற்றில் 62 வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. 74 வாக்குறுதிகளுக்குநிதி ஒதுக்கீடு தேவையில்லை. அவற்றில் 45 வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திமுக அரசின் முதலாமாண்டிலேயே 107 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+