அதிமுகவிலிருந்து விலகினார் முன்னாள் துணை மேயர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மாநகராட்சி முன்னாள் அதிமுக துணை மேயர் நவநீத கிருஷ்ணன் அதிமுகவிலிருந்து விலகினார்.

மதுரை நகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், மாநகராட்சி முன்னாள் துணை மேயர் பதவியைவகித்தவருமான சோ. நவநீத கிருஷ்ணன் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிமுக ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல்நான் அதில் இருந்து வருகிறேன். அமரர் எம்.ஜி.ஆர். எனக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வந்தார்.

வட்டச் செயலாளர் பொறுப்பிலும், பின்னர் கவுன்சிலர் பொறுப்பிலும், துணை மேயர் பொறுப்பிலும், மாவட்டச்செயலாளர் பொறுப்பிலும், என்னை அமர வைத்தார். கட்சி ஆய்வுப் பணிகள் உள்பட முக்கியபொறுப்புகளையும் என்னிடம் ஒப்படைத்தார்.

ஆனால் அவர் மறைந்த பின்னர் எனக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இருப்பினும் அவர்தொடங்கிய கட்சிக்கு எவ்வித இடையூறும் ஏற்பட்டு விடக் கூடாததே என்பதற்காக தொடர்ந்து கட்சிப்பணியாற்றி வந்தேன்.

எம்.ஜி. ஆர். மறைந்த பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா வர வேண்டும் என முன்மொழிந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன்று எம்.ஜி.ஆர். விசுவாசிகள் கட்சியில்புறக்கணிக்கப்படுகிறோம். உள்கட்சி ஜனநாயகம் இன்று இல்லை. கட்சித் தலைவரை பார்க்கவோ, பேசவோமுடியாத நிலை. இப்படியே தொடர்ந்து நிலை உள்ளதால் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகமுடிவு செய்து விட்டேன்.

மத்திய தொகுதிக்கு நான் சீட் கேட்டு, அது கிடைக்காத கோபத்தில் விலகல் முடிவை எடுக்கவில்லை. எனது நிலைபோன்று தான் பல அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகளின் நிலை உள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்புமேலும் பலர் கட்சியை விட்டு விலகுவர்.

ஏற்கனவே துணை மேயராக இருந்த மிசா. பாண்டியன் கட்சியை விட்டு விலகி விட்டார். இப்போது நானும் விலகிவிட்டேன் என்று கூறினார் நவநீத கிருஷ்ணன்.

ஏற்கனவே மதுரை மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம் ஜெயலலிதாவுக்கு எதிராக புரட்சிக் கொடிதூக்கியுள்ளார். திமுக சார்பாக செயல்படப் போவதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் முன்னாள் துணைமேயர் நவநீதகிருஷ்ணனும் அதிமுகவை விட்டு விலகியுள்ளார். மேலும் பலர் விலகுவர் எனவும் குண்டைத்தூக்கிப் போட்டுள்ளார்.

நவநீதகிருஷ்ணன் திமுகவில் சேருவாரா அல்லது விஜயகாந்த் கட்சியில் சேர்ந்து மதுரை மத்திய தொகுதியில்போட்டியிடுவாரா என்பது குறித்து மதுரை அரசியல் வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+