போப் மீண்டும் வருத்தம்: தொடரும் போராட்டங்கள்

Subscribe to Oneindia Tamil

ரோம்:

இஸ்லாம் குறித்து நான் பேசிய பேச்சில் இடம் பெற்ற கருத்துக்கள் எனது சொந்தக் கருத்துக்கள் அல்ல. அவைஇஸ்லாமியர்களிடையே வேதனையை ஏற்படுத்தியமைக்காக மீண்டும் உளமார வருந்துகிறேன் என்று போப்16வது பெனடிக்ட் கூறியுள்ளார்.

போப்பாண்டவர் 16வது பெனடிக்ட் தனது சொந்த நாடான ஜெர்னிக்கு சென்றிருந்த போது அங்கு உரைநிகழ்த்தினார். அப்போது இஸ்லாம் மதம் தோன்றியது குறித்தும், புனிதப் போர் (ஜிஹாத்) குறித்தும், நபிகள்நாயகத்தின் போதனைகள் குறித்தும் சில மேற்கோள்களை காட்டிப் பேசினார்.

இது இஸ்லாமியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்சமுதாயத்தினரிடையே போப்புக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. பல முஸ்லீம் நாடுகள் போப்புக்குஎதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

வாடிகன் சிட்டிக்கும், தங்களுக்கும் இனி உறவு கிடையாது என சில முஸ்லீம் நாடுகள் அறிவித்து தங்களதுதூதர்களை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளன. அதிகரித்து வரும் எதிர்ப்பையடுத்து தனது பேச்சுக்காகபோப்பாண்டவர் வருத்தப்படுவதாக அவரது உதவியாளர் அறிக்கை மூலம் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று ரோம் நகருக்கு அருகே காஸ்டல் கோண்டோல்போ என்ற இடத்தில் நடந்த பிரார்த்தனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட போப் பாண்டவர் தனது பேச்சுக்காக மீண்டும் வருத்தம் தெரிவித்தார்.அவர் பேசுகையில், எனது பேச்சு இவ்வளவு பெரிய அதிருப்தியை ஏற்படுத்தும் என நான் உணரவில்லை.இதற்காக நான் உளமார வருத்தம் தெரிவிக்கிறேன்.

ஆனால் நான் பேசியது எனது சொந்தக் கருத்து அல்ல. ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட கருத்தைத் தான் நான்மேற்கோள் காட்டிப் பேசினேன்.

எனது பேச்சின் உண்மையான நோக்கத்தை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். ஒவ்வொருமதமும் பரஸ்பர நட்புடன் பழக வேண்டும், பேசிக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் நான் வலியுறுத்தினேன்.அதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.

எனது பேச்சு பல நாடுகளில் வருத்தத்தை தோற்றுவித்திருக்கிறது. அதற்காக நான் மீண்டும் உளமாற வருத்தம்தெரிவித்துக் கொள்கிறேன். முஸ்லீம் சமுதாயத்தினரை குறை கூறி நான் பேசியதாக அவை கருதப்பட்டு விட்டது.அதற்காக வருந்துகிறேன் என்று கூறினார் போப்.

இதற்கிடையே போப்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு முஸ்லீம் நாடுகளில் தொடர்ந்துபோராட்டங்கள் நடந்து வருகின்றன. பாலஸ்தீன பகுதியில் உள்ள சர்ச்சுகள் தாக்கப்பட்டு வருகின்றன.

மேற்குக் கரையில் உள்ள துல்கார்ம் நகரில் உள்ள மிகப் பெரிய கத்தோலிக்க பேராலயம் தீ வைத்துஎரிக்கப்பட்டது. இப்பகுதியில் மேலும் பல சர்ச்சுகள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.

போப்பின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஈரான் நாட்டில் உள்ள பல்வேறு மத போதனைமையங்கள் நேற்று முழுவதும் மூடப்பட்டிருந்தன. இங்கு வழக்கமாக நடத்தப்படும் போதனை நிறுத்தப்பட்டு,போப்பின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மத குருமார்கள் உரை நிகழ்த்தினர்.

புதின் அறிவுரை:

இந்த நிலையில், உலகில் உள்ள மதத் தலைவர்கள் எதையும் யோசித்து பேசுவது நல்லது என்று ரஷ்ய அதிபர்விலாடிமிர் புதின் கூறியுள்ளார்.

போப்பின் பேச்சு எழுப்பியுள்ள சர்ச்சை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், உலகின் உணர்ச்சிகரமானது.அவற்றை மனதில் கொண்டு உலகில் உள்ள அனைத்து மதத் தலைவர்களும் பேச வேண்டும்.

பேசுவதற்கு முன்பு அதன் விளைவுகளையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சர்ச்சைக்குரிய விஷயங்களைபேசுவதை தவிர்த்தாலே இது போன்ற சிக்கல்களை தவிர்த்து விடலாம்.

பொறுப்பும், பொறுமையும் மதத் தலைவர்களுக்கு மிகவும் அவசியமானது. அதை நாம் மறந்து விடக் கூடாதுஎன்றார் புதின்.

ரஷியாவில் உள்ள முஸ்லீம் சமுதாயத்தினரும் போப்புக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஆனால் அமைதியான முறையிலேயே போராட்டங்கள் நடந்து வருவதாக ரஷிய அரசு அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+