ராஜன் செல்லப்பா-பயோ டேட்டா
மதுரை:
![]() |
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா எம்ஜிஆரின் தீவிரரசிகர் ஆவார்.
55 வயதான செல்லப்பா, மதுரை பசுமலை உயர்நிலைப்பள்ளியில் எஸ்எஸ்எல்ஸியும், மதுரை காமராஜர்பல்கலைக் கழகத்தில் பி.ஏ மற்றும் எம்.ஏ படித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் படித்தவர். இவருக்குசொந்த ஊர் மதுரை அருகேயுள்ள சாக்கிலிபட்டி கிராமம்.
தற்போது பசுமலையில் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், சத்யன் என்ற மகனும்உள்ளனர்.இவர் எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக தொடங்கிய போது, சென்னை சட்டக்கல்லூரிமாணவரணி அதிமுக செயலாளராக அரசியலில் நுழைந்தார். 1977ம் ஆண்டு பி.எல் முடித்ததும் மதுரையில்தர்மராஜ் சந்தோசத்திடம் ஜூனியர் வக்கீலாக பணியாற்றினார்.
1980ம் ஆண்டு திண்டுக்கல் லோக்சபா தொகுதியிலும், 1989ம் ஆண்டில் ஜெயலலிதா அணி சார்பில்திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1992ம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகள் ராஜ்யசபா எம்பியாகவும் இருந்துள்ளார். முன்பு அதிமுகவில் பிளவுஏற்பட்டபோது, இரட்டை இலை, சின்னத்தை முடக்க திருநாவுக்கரசர் தலைமையில் ராஜ்யசபா எம்பிக்கள்கையெழுத்திட்டனர். அதில் கையெழுத்திட்ட எம்பிக்களில் இவரும் ஒருவர்.
ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக மறைந்த எஸ்டி.சோமசுந்தரம் நமது கழகம் என்ற தனிக்கட்சியைதொடங்கியபோது அதில் இணைந்தார் ராஜன் செல்லப்பா.
2001 தேர்தலின் போது மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ராஜன். பந்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரைமீனாட்சியம்மன் கோயிலில் குண்டு வெடித்த வழக்கில் சிபிஐ இவரிடமும் விசாரணை நடத்தியது. அப்போதுஇவர் ராஜ்யசபா எம்பியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில முறை அதிமுகவை விட்டு வெளியேறி மீண்டும் இணைந்தாலும் தீவிரமான எம்ஜிஆர் ரசிகர். முக்குலத்தோர்சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு சசிகலா குடும்பத்தின் முழு ஆதரவும் உண்டு.
சில ஆண்டுகளாக பதவிகள் இல்லாமல் இருந்த இவரை சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் மதுரை மாநகரசெயலாளர் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சு.சுவாமி ஆலோசனை:
இந் நிலையில் மதுரை தொகுதியில் பாஜக ஆதரவோடு ஜனதா கட்சியின் சார்பிலும் வேட்பாளரை நிறுத்தசுப்பிரமணியம் சுவாமி முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் அவர்ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்தத் தொகுதியில் தான் சுவாமியின் கட்சி அலுவலகமும் மதுரை வீடும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் மாநிலத் தலைவர் சந்திரலேகா அல்லது மதுரை மாவட்ட செயலாளர்சசிக்குமார் ஆகியோரில் ஒருவர் போட்டியிடக் கூடுமாம்.



Click it and Unblock the Notifications
