மண்டேலாவுக்கு மனசாட்சியின் தூதர் விருது
ஜோகன்னஸ்பர்க்:
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆம்னஸ்டிஅமைப்பின் மனசாட்சியின் தூதர் என்ற விருது கிடைத்துள்ளது.
சர்வதேச மனித உரிமை கழகமான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில்ஆண்டுதோறும் மனித உரிமை தொடர்பாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டுக்கான மனசாட்சியின் தூதர் என்ற விருது நெல்சன்மண்டேலாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆம்னெஸ்டி அமைப்பின் நிறுவனர் பில் சிப்சி கூறுகையில், வேறுயாரையும் விட நெல்சன் மண்டேலதான் இந்த விருதுக்கு மிகப் பொருத்தமானவர்.பொது வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடனும், கொள்கையுடனும் செயல்பட்டவர்அவர் மட்டுமே.
சுதந்திரம், நீதி, நியாயம் ஆகியவற்றுக்காக மிகக் கடுமையாக போராடியவர்மண்டேலா. அதை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுக்கு அவர்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர ஆப்பிரிக்காவிலும், உலகின் பிற பகுதிகளிலும் எச்.ஐ.வி, எய்ட்ஸால்பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோருக்காக குரல் கொடுத்தவர், பாடுபட்டவர்.அவர்களது மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என போராடியவர் என்றுகூறியுள்ளார்.
ஆம்னெஸ்டி அமைப்பின் பொதுச் செயலாளர் ஐரீன் கான் கூறுகையில், இந்த விருதைபெற மண்டேலா சம்மதித்திருப்பதன் மூலம் இந்த விருதுக்கே பெருமைகிடைத்துள்ளது என்றார்.
தென்னாப்பிரிக்காவில் இனவெறியை எதிர்த்தும், வெள்ளையர் ஆட்சியை எதிர்த்தும்போராடி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள சிறையில் வாடியவர் மண்டேலா. அந்நாட்டின்முதல் கருப்பின அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நவம்பர்1ம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆம்னெஸ்டி விருதுமண்டேலாவுக்கு வழங்கப்படவுள்ளது.
அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் எய்ட்ஸ் விழிப்புர்ணவு, ஒழிப்புபோராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார் மண்டேலா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications