மொய்லி-கிருஷ்ணசாமி மோதல் முற்றுகிறது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கும், மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லிக்கும் இடையிலானமோதல் முற்றியுள்ளது.

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியைத் தயார்படுத்தும்வேலையில் மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி இறங்கியுள்ளார். தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ளஇடங்களை அடையாளம் காணவும், தேர்தல் ஏற்பாடுகளை கவனிக்கவும் இடைக்காலக் குழுக்கள் மற்றும் தேர்தல்பார்வையாளர்களை அவர் நியமித்து வருகிறார்.

ஆனால் இதற்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் வேலூர்கிழக்கு மாவட்ட செயலாளர் முனி ரத்தினம் அப்பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால் வீரப்ப மொய்லிதலையிட்டு வாசன் ஆதரவாளரான முனிரத்தினம் அப்பொறுப்பில் தொடருவார் என அறிவித்தார்.

இதனால் கிருஷ்ணசாமி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களிடம்கிருஷ்ணசாமி பேசுகையில், தலைவரான எனக்கும், மேலிடப் பார்வையாளரான வீரப்ப மொய்லிக்கும் இடையேகடிதத் தொடர்பு உள்ளது.

வீரப்ப மொய்லி எனக்கு எழுதிய 3 கடிதங்களில் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், விழுப்புரம், திருவாரூர்,நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

எனக்கும், அவருக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றம் எப்படி வெளியானது என்பது எனக்குப் புரியவில்லை.வீரப்ப மொய்லியே இதை வெளியிட்டாரா என்றும் தெரியவில்லை.

காங்கிரஸ் தலைவராக என்னை சோனியா காந்தி நியமித்துள்ளார். கட்சியை வலுப்படுத்தும் நோக்கில்தான்என்னை நியமித்துள்ளார். காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரோடு பழகியவன் நான். கட்சியின்சட்ட திட்டங்கள் எல்லாம் எனக்கு அத்துப்படி.

விழுப்புரம், திருவாரூர் மாவட்ட தலைவர்கள் ராஜினாமா செய்ததால் தான் அங்கு மாவட்ட பொறுப்பாளர்கள்நியமிக்கப்பட்டனர். இவர்கள் தலைவர்கள் அல்ல. அதேபோல நாமக்கல் மாவட்டத்துக்கு தனியாக இடைக்காலநிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது. அம்மாவட்ட தலைவர் ராஜினாமா செய்ததால் தான் இந்த கமிட்டி.

வேலூர் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த முனிரத்தினம் கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்வேட்பாளருக்கு எதிராக வேலை பார்த்தவர். இப்போது ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசு அமையாமல்இருந்திருந்தால் அவர் நிச்சயம் காங்கிரஸில் இருந்திருக்க மாட்டார்.

அப்படிப்பட்டவர் தொடர்ந்து தலைவர் பொறுப்பில் இருப்பார் என்று மொய்லி அறிவித்திருப்பது கட்சிவிரோதத்திற்கு துணை போகும் செயலாகும். முனிரத்தினம் ராஜினாமா செய்யப்பட்டதால் தான் அங்கு தற்காலிகநிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது. அது தொடர்ந்து நீடிக்கும். அதேபோல பிற மாவட்டங்களில் நியமிக்கப்பட்டதற்காலிக கமிட்டிகளும் தொடர்ந்து செயல்படும்.

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரவுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி ஆலோசைனக் கூட்டத்தைக்கூட்டியுள்ளார். அதற்குள் நமக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை அறிந்து கொள்ள அனைத்துமாவட்டங்களுக்கும் நண்பர்களை அனுப்பி ஆய்வு செய்யும் பொருட்டே தேர்தல் பார்வையாளர்களைநியமித்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது?

இது அன்றாடம் நடைபெறும் பணிதான். இதற்கெல்லாம் கட்சி மேலிடத்தின் அனுமதியைப் பெறவேண்டியதில்லை. தொடர்பான செய்திகள்னுதாரணங்கள் உள்ளன. கடந்த 1987ம் ஆண்டு மறைந்த ஜி.கே.மூப்பனார்தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது ஒவ்வொரு எம்.பி. தொகுதிக்கும் ஒரு அமைப்பாளரை நியமித்தார்.அதேபோல 2001ல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைவராக இருந்தபோதும் இதுபோன்ற பார்வையாளர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது கட்சியை வலுப்படுத்தும் முயற்சிதான். மேலும், இது சட்டசபைத் தேர்தலோ அல்லது பாராளுமன்றதேர்தலோ கிடையாது. உள்ளாட்சித் தேர்தல். இதில், தமிழக காங்கிரஸ் கட்சியினரின் கருத்தை அறிந்துதான்மேலிடம் முடிவு எடுக்க முடியும். எனவே வீரப்ப மொய்லிக்கும், இந்தத் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இதில் அவர் தலையிடத் தேவையில்லை.

எனவே நான் நியமித்த பார்வையாளர்கள் தொடர்ந்து செயல்படுவார்கள். இடைக்கால நிர்வாக கமிட்டிகளும்தொடர்ந்து செயல்படும்.

வீரப்ப மொய்லி தேவையில்லாமல் தலையிடுவது, எனக்கும், அவருக்குமான கடிதங்கள் வெளியானது, கட்சியின்ஒழுங்கு நடவடிக்கை குழு எடுக்கும் நடவடிக்கைகளில் எனது கருத்து கேட்கப்படாதது ஆகியவை குறித்துதலைவி சோனியா காந்திக்கு விரிவாக கடிதம் எழுதியுள்ளேன் என்றார் கிருஷ்ணசாமி.

இதற்கிடையே, கோஷ்டி இல்லாத காங்கிரஸை உருவாக்க பாடுபடும் கிருஷ்ணசாமிக்கு எதிராக செயல்படும்வீரப்ப மொய்லி தமிழகத்திற்கு வந்தால் அவருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என இளைஞர் காங்கிரஸ்முன்னாள் தலைவர் ஐஸ் அவுஸ் தியாகு எச்சரித்துள்ளார்.

வீரப்ப மொய்லி, கிருஷ்ணசாமி இடையிலான இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியிருப்பதால் மொய்லி அல்லதுகிருஷ்ணசாமி ஆகியோரில் ஒருவரது பதவிக்கு விரைவில் ஆப்பு வரும் என காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள்தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+