கோவில் விழாவில் ரவுடிக்கு வெட்டு
சென்னை:
சென்னை அருகே கோவில் திருவிழாவின் போது ரவுடி ஒருவரை இன்னொரு கோஷ்டி சூழ்ந்து கொண்டுசரமாரியாக வெட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் சிதறி ஓடினர்.
சென்னை திருவொற்றியூர் பூங்காவன புரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது தம்பி தேவன். இருவரும்அப்பகுதியில் பிரபலமான ரவுடிகளாம். ராமமூர்த்தி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடையமனைவி மங்கை. இவருக்கு சேர வேண்டிய சொத்தைப் பிரித்து தர தேவன் மறுத்து விட்டதாக தெரிகிறது.இதுதொடர்பாக தேவனிடம் பலமுறை மங்கை கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் கொடுப்பதாக தெரியவில்லை.இதனால் ஆத்திரமடைந்த மங்கை, தேவனை தீர்த்துக் கட்டுமாறு தனது மருமகன் கார்த்திக்கிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பூங்காவனபுரத்தில் பெரியபாளையத்தம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதுதொடர்பாகஇன்னிசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைக் காண தேவன் தனது ஆட்களுடன் வந்திருந்தார்.
இதை அறிந்த கார்த்திக் தனது ஆதரவாளர்கள் நான்கு பேருடன் அங்கு வந்தார். தேவனிடம் வாக்குவாதத்தில்ஈடுபட்டார். அது சண்டையாக மாறியது. கார்த்திக்குடன் வந்தவர்கள் தேவனை சூழ்ந்து கொண்டு கத்தி, அரிவாள்போன்றவற்றால் சரமாரியாக தாக்கினர்.
இதில் தலை, கழுத்து, கை, கால் என மொத்தம் எட்டு இடங்களில் வெட்டுப்பட்ட தேவன் மயங்கி விழுந்தார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவில் விழாவுக்கு வந்தவர்களும், இன்னிசை நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தவர்களும் அங்கிருந்து சிதறி ஓடினர்.
திருவொற்றியூர் போலீஸார் விரைந்து வந்து தேவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தலைமறைவாகி விட்ட மங்கை, கார்த்திக் உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications