தமிழகம் வருகிறார் அப்துல் கலாம்
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 3 நாள் சுற்றுப்பயணமாக நாளை மறு நாள்தமிழகம் வருகிறார்.
21ம் தேதி தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் வரும் கலாம்அன்றிரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் காலை ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிவருகிறார்.விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை பார்வையிடும் அவர் பின்னர்விவேகானந்தா கேந்திர வித்யாலயா பள்ளிக்குச் சென்று மாணவ, மாணவியருடன்கலந்துரையாடுகிறார்.
இதையடுத்து கூடங்குளம் அணு மின் நிலையம் செல்லும் கலாம் அணு மின் நிலையபணிகளைப் பார்வையிட்டு விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் நெல்லை வரும் கலாம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்செல்கிறார். அங்கு போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கைக் கால்களைவழங்குகிறார்.
அதே வளாகத்தில் நடைபெறும் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில்கலந்து கொள்கிறார். மாலை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் இந்தியதொழில்துறை கூட்டமைப்பின் நெல்லை மாவட்ட பிரிவு சார்பில் நடைபெறும்நிகழ்ச்சியில் பங்கெடுக்கிறார்.
பின்னர் மதுரை செல்லும் கலாம், வீடியோ கான்பரன்சிங் மூலமாக இதய நோய் தடுப்புகருத்தரங்கைத் தொடங்கி வைக்கிறார். இரவு மதுரை அரசினர் விருந்தினர் இல்லத்தில்தங்குகிறார்.
23ம் தேதி காலை 8 மணிக்கு கொடைக்கானல் செல்கிறார். அங்கு அன்னை தெரசாமகளிர் பல்கலைக்கழகத்தின் 16வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.பிறகு திண்டுக்கல் செல்லும் கலாம், பெஸ்கி கல்லூரி வளாகத்தில் உள்ள பாதிரியார்சின்னத்துரை வீட்டுக்குச் சென்று சந்திக்கிறார். இவர் அப்துல் கலாமின் கல்லூரிஆசிரியராவார்.
அந்த சந்திப்பை முடித்துக் கொண்டு காந்திகிராம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்குசெல்கிறார். பிற்பகலில் தனது சொந்த ஊரான ராமேஸ்வரம் செல்கிறார்.
இரவே மதுரை திரும்பும் அப்துல் கலாம், அங்கு தங்குகிறார். 24ம் தேதி காலைகாரைக்குடி செல்லும் கலாம் கோவிலூர் ஆதீனத்தை சந்திக்கிறார். 9.25 மணிக்குஅல்-ஜமியூல் முனவார் மசூதிக்கு செல்கிறார்.
பின்னர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில்உரையாடுகிறார். இதைத் தொடர்ந்து தஞ்சை செல்லும் கலாம், அங்குசாஸ்த்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நேனோ தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன பயோமெட்டீரியல்ஸ் மையத்தை தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து முத்துவீரகந்தியான் பட்டியில் உள்ள பெரியார் கிராமத்தின் மேம்பாட்டுப்பணிகளை பார்வையிட்ட பின் தமிழ்ப் பல்கலைக்கழகம் செல்கிறார்.
மாலை வீரய்யா வாண்டையார் நினைவு ஸ்ரீபூண்டி புஷ்பம் கல்லூரி பொன் விழாவில்பங்கேற்கிறார். அதன் பின்னர் திருச்சி வரும் அப்துல் கலாம் மாலை 5.45 மணிக்குடெல்லி திரும்புகிறார்.
தமிழக அரசின் செய்திக் குறிப்பில் குடியரசுத் தலைவரின் இந்த உத்தேச பயணவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை தமிழகம் வந்த கலாம் திரும்பும்போது அவரது விமானத்தில்வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததும், இதனால் 2 மணி நேரம் அவர் சென்னைவிமான நிலையத்திலேயே காத்திருந்துவிட்டு அதிகாலையில் டெல்லி சென்றதும்நினைவுகூறத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications