விஜய்காந்துக்கு கருணாநிதி மீண்டும் கொக்கி
சென்னை:
கட்சியின் பெயரில் மட்டும் திராவிடம் என்ற பெயர் இருந்தால் மட்டும் அந்தக் கட்சிதிராவிடக் கட்சி என்றாகி விடுமா என தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு முதல்வர்கருணாநிதி மீண்டும் மறைமுகமாக கேள்வி கேட்டுள்ளார்.
பல்வேறு கட்சியினைச் சேர்ந்த ஏராளமானோர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில்இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அப்போது கருணாநிதிபேசுகையில்,பல சங்கடங்களுக்கு, சோர்வுகளுக்கு ஆட்பட்டாலும் கூட, துரோகச் செயல்களால்துளைக்கப்பட்டாலும் கூட, எல்லாவற்றையும் மீறி இருக்கப் போகிற ஒரே இயக்கம்திமுக மட்டும்தான்.
பெரியார் தொடங்கி, நம்முடைய கையிலே ஒப்படைத்த திராவிடர் கழகம் சமுதாயப்பணிகளை மட்டும் ஆற்றுகிற இயக்கம். சமுதாயப் பணிகளை மாத்திரம் ஆற்றினால்போதாது, அப்பணியை ஆற்ற ஆட்சிப் பொறுப்புக்கு நாம் வர வேண்டும் என்றுஅண்ணா கருதினார்.
திராவிட என்னும் பெயர் இருந்தாலே அது திராவிட இயக்கமாகி விட முடியாது,திராவிடக் கட்சியாகி விட முடியாது. திராவிட என்ற பெயரை யார் வேண்டுமானாலும்சூட்டிக் கொள்ளலாம்.
ஆனால் உண்மையான திராவிட இயக்கம் எது? கஷ்ட நிஷ்டங்களை அனுபவித்ததிராவிட இயக்கம் எது? தியாகச் செயல்களிலே ஈடுபட்ட திராவிட இயக்கம் எது?என்பதை நீங்கள் கேட்டும், படித்தும் இருப்பீர்கள்.
அப்படிப்பட்ட பேரியக்கத்தின் சார்பில் அதிலே இணைய வந்திருக்கிற உங்களைவருக வருக என்று வரவேற்று, மழைத் துளிகளைப் போல வந்திருக்கிறீர்கள்,மகாநதியாக பெருகி இந்த தமிழ்ச் சமுதாயத்திற்கு பயன்படுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் கருணாநிதி.
மாணவர்களுக்கு தமிழ் உணர்வு:
சென்னை லயோலா கல்லூரியில் மாணவர் மன்றம் சார்பில், கருணாநிதிக்கு பாராட்டு விழா நடந்தது.
இதில் கருணாநிதி பேசியதாவது,
இந்த கல்லூரியின் வரலாறும் என்னுடைய வரலாறும் ஒன்று தான் இங்கே குறிப்பிட்டார்கள். இக்கல்லூரி வயதும் எனது வயதும் ஒன்று தான். இந்தஒற்றுமையை யாரும் குலைக்க முடியாது.
நான் பிறந்த 1924ம் வருடம் தான் காவிரி நதி நீர் ஒப்பந்தம் உருவானது. காவிரி ஒப்பந்தமும் பிரச்சனைக்குரியது தான். நானும் பிரச்சனையாகவேஉள்ளேன். பிரச்சனைக்குரிய எனக்கு பெரும் விழா எடுத்து பாராட்டினீர்கள். இதனால் எனக்கு உவகை கூத்தாடச் செய்கிறது. நான் முதல்வராகவருவேன் என்று ஆருடம் (தேர்தல் கருத்துக் கணிப்பு) சொன்னது இந்த கல்லூரி. இதற்கு இக்கல்லூரிக்கு பாராட்டுக்கள்.
ஆண்டவன் பெயரில், கிரகங்கள் பெயரில் ஆருடம் சொன்னால் நான் அதை ஏற்பதில்லை. காரணம் நான் ஏற்றுக்கொண்ட கொள்கை அது. லயோலாகல்லூரியின் கருத்துக்கணிப்பு என்றாலே அரசியல்வாதிகள் அதிர்ச்சியோடுதான் பார்க்கிறார்கள்.
மாணவர் சமுதாயத்திற்கே வழிகாட்டியாக லயோலா கல்லூரி மாணவர்கள் விளங்குகிறார்கள். கல்லூரியில் அரசியல் பேசக்கூடாது என்று வந்தேன்.ஆனால் இங்கு பேசிய வேதமுத்து, வைரமுத்து போல வெடித்தார். வெடித்தபிறகு கருத்துக்கள் வெளிவருவதை தடுக்க முடியாது.
வெடிக்கும் முன்பு தான் தவிக்க முடியும். நானும் என்னை அறியாமல் வெடித்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. அதற்கு இங்கு உரையாடியவர்கள் தான்பொறுப்பு. நான் கலை பற்றி பேசினால் கூட அரசியல் பேச வேண்டியிருக்கும். எனவே நான் தொல்காப்பிய இலக்கியம் பற்றி பேச விரும்புகிறேன்.
தொல்காப்பியர் விருது எனக்கு ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் உள்ள ஆழ்வார்கள் மையம் சார்பில் இந்திய குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது. அன்றுகால நேரம் கருதி விரிவாக பேசமுடியவில்லை.
தொல்காப்பியத்தை வனமாக ஒப்பிட்டு பேசினார்கள். கல்லும் முள்ளும் நிறைந்த வழிகள். கரடிகள், விலங்குகள் திரிகின்ற பகுதியாக உள்ள நிலையில்கடந்த காலத்தில் தொல்காப்பியத்தை உருவாக்கி விட்டோம்.
தொல்காப்பிய பூங்கா எழுதியபோது தினமும் நான் எழதியதை நண்பர்களிடம் வாசித்துகாட்டி அவர்கள் பாராட்டிய பிறகு தான் அடுத்த பகுதியைஎழுதுவேன். நான் எழுதிய தொல்காப்பிய 12 பதிப்புகளில் வெளிவந்துள்ளது. தொல்காப்பியத்தில் உள்ள கடினமானவற்றை எளிதாக புரியும் வகையில்எழுதியுள்ளேன்.
தொல்காப்பியத்தை வாசித்தால் பல ஆசிரியர்களுக்கு புரியாது. அந்த நிலையில் மாணவர்களுக்கு எப்படி புரியும் எனவே நான் பல குட்டிக் கதைகளை கூறிவிளக்கியுள்ளேன். இதனால் இப்போது தொல்காப்பிய பூங்காவுக்குள் சென்று எளிதில் படிக்கலாம்.
நமது கலாசாரம், பண்பாடு வீரம், தமிழ் இன உணர்வு ஆகியவற்றை மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஊட்டவேண்டும் என்றார் கருணாநிதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications