இலங்கை விமானங்களில் பழங்களுக்கு தடை
சென்னை:
இந்தியாவிலிருந்து இலங்கை செல்லும் விமானங்களில் பழங்களைக் கொண்டு செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிக அளவில் பயணிகள் செல்வதோடு, சரக்குப்போக்குவரத்தும் அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக மாம்பழங்கள் அதிகஅளவில் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது.இந்திய மாம்பழங்கள் சுவையாக இருப்பதாலும், உற்பத்தி அதிகமாக இருப்பதாலும்இலங்கைக்கு அதிக அளவில் மாம்பழங்கள் ஏற்றுமதியாகின்றன. இந் நிலையில்இந்திய விமான நிறுவனங்களுக்கு இலங்கை அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு இந்தியாவிலிருந்து வந்திறங்கும்பயணிகளை, மாம்பழம் உள்ளிட்ட எந்த வகையான பழங்களையும் கொண்டு வரஅனுமதிக்க கூடாது. மீறி கொண்டு வரப்பட்டால் விமான நிலையத்திலேயே அவைஅழிக்கப்பட்டு விடும்.
எனவே இதை முன் கூட்டியே பயணிகளுக்கு தெரியப்படுத்தி, அவர்களுக்கு ஏற்படக்கூடிய சிரமத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல மற்ற நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு வரும் விமானங்களில் பழங்கள்கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழங்கள் மூலம் தொற்று நோய் பரவுவதைத் தடுக்க இறக்குமதி விதிகளை அந் நாடுகடுமையாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications