தேசிய கொடி அவமதிப்பு சர்ச்சையில் சானியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Sania Mirsa
டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா இடம்பெற்றுள்ள ஷூ விளம்பரத்தில்தேசியக் கொடி அவமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சானியாவுக்கு எதிராக போராட்டம்வெடித்துள்ளது.

சானியா மிர்ஸா வாயைத் திறந்தாலே ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடுகிறார்.போட்டிகளில் கலந்து கொள்ளும்போது அவர் அணியும் டிரஸ் குறித்து முன்பு சர்ச்சைஎழுந்தது. இதற்கு அவர் பதிலளித்துப் பேசப் போக அதுவும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதனால் சமீப காலமாக சானியா அதிகம் பேசுவதில்லை. குறிப்பாக பொதுஇடங்களில் மிகவும் அடக்கமாக பேசக் கற்றுக் கொண்டு விட்டார். நேற்றுமுன்தினம்தான் கொல்கத்தாவில் பேட்டி அளித்தபோது, நான் ஏதாவது பேசினாலேசர்ச்சையாகி விடுகிறது. எனவே பேசும்போது அளந்து அளந்துதான் பேசுகிறேன் என்றுகூறியிருந்தார் சானியா.

சொல்லி வாய் மூடுவதற்குள் ஒரு பஞ்சாயத்தை கூட்டிக் கொண்டு வந்து விட்டார்சானியா. இத்தாலியைச் சேர்ந்த லோட்டோ நிறுவனம் சானியாவை விளம்பர மாடலாகபுக் செய்துள்ளது. அதன் ஷூ விளம்பரத்தில் சானியா நடித்துள்ளார்.

இந்த விளம்பரம்தான் சூட்டைக் கிளப்பியுள்ளது. இதில், கையில் ஒரு கிடாரைப்பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார் சானியா. கிடாரின் கைப்பிடி மேலே இருக்க, கீழ்ப்பகுதியின் மீது சானியா தனது வலது காலை வைத்திருக்கிறார். அவர் கால் வைத்துள்ளஇடத்தில், தேசியக் கொடியின் மூவண்ணம் இடம் பெற்றுள்ளது.

இதுதான் பிரச்சினையைக் கிளப்பி விட்டுள்ளது. தேசியக் கொடி மீது கால் வைத்தபடிநின்று தேசியக் கொடிக்கு அவமரியாதை ஏற்படுத்தி விட்டார் சானியா என்று கூறிபிரியங்கா, ராகுல் காந்தி பேரவை என்ற அமைப்பு போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

சானியாவின் சொந்த ஊரான ஹைதராபாத் நகரில் அவரது கொடும்பாவியை எதிர்த்துஅவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த அமைப்பின் தலைவரான மனோஜ்அலெக்சாண்டர் கூறுகையில்,

Sania Mirsa
தேசியக் கொடியை அவமானப்படுத்தியுள்ளார் சானியா. இதற்காக அவர் பகிரங்கமன்னிப்பு கேட்க வண்டும். இந்த செயலில் சம்பந்தப்பட்ட அனைவரும் மன்னிப்புகேட்க வேண்டும் என்றார்.

Sania Mirsa
ஆனால், அந்த மூவண்ணக் கொடி இத்தாலி நாட்டுக் கொடி என்கிறது சானியா தரப்பு.இத்தாலியைச் சேர்ந்த நிறுவனம் தனது தேசிய அடையாளத்தை பேக்கிரவுண்டாகவைத்து இந்த விளம்பரத்தை எடுத்தது. நமது கொடியை அல்ல என்கிறார்கள் சானியாதரப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+