கலாம் வருகை-கேரளத்தில் குண்டு வெடிப்பு
திருவனந்தபுரம்:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வந்த நேரத்தில், திருவனந்தபுரம் தபால் நிலையத்தில் தபாலில் அனுப்பப்பட்டகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று கேரளா வந்திருந்தார். அவர் வருவதற்கு சில மணி நேரம் முன்புதிருவனந்தபுரம் மணக்காடு தபால் நிலையத்தில் தபால் வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அங்குள்ள காவல் நிலையத்தில் ஊழியர் ரவிக்குமார் வந்திருந்த தபால்களை பிரித்துக் கொண்டிருந்தார்.அப்போது சீல் வைக்கப்பட்ட 3 உறைகளில் ஒன்றை எடுத்து அவர் பிரித்தார்.
அப்போது அது பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாகயாரும் இதில் காயமடையவில்லை. உடனடியாக போலீஸார் விரைந்து வந்தனர். வெடிகுண்டு நிபுணர்களும்விரைந்தனர்.
சீல் வைக்கப்பட்டிருந்த மற்ற இரு உறைகளையும் பத்திரமாக மீட்டு அவற்றை முன்னெச்சரிக்கையுடன் பிரித்துப்பார்த்தபோது அதில் வெடிபொருள் இருந்தது தெரிய வந்தது.
இந்த மூன்று உறைகளும் ஸ்ரீகாரியம் தபால் நிலையத்திலிருந்து வந்திருந்தன. இவற்றை யார் அனுப்பியது என்றவிவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்த அதே நேரத்தில் கேசவபுரம் என்ற இடத்தில் ஒரு கடைக்கு வந்தபார்சலை பிரித்துப் பார்த்தபோது அதுவும் வெடித்தது. இதிலும் யாரும் காயமடையவில்லை.
இந்த இரு சம்பவங்கள் தவிர திருவனந்தபுரம் புறநகரில் உள்ள மலாயிங்கில் என்ற இடத்தில் குரூட் ஆயில்குண்டு ஒன்றும் வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்டது. இப்படி அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள்கண்டுபிடிக்கப்பட்டதால் திருவனந்தபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
குடியரசுத் தலைவர் வருகையின்போது இவ்வாறு குண்டுகள் வெடித்ததால் திருவனந்தபுரத்தில் பாதுகாப்புபன்மடங்கு அதிகரிக்கப்பட்டது. டெல்லியிலிருந்து வெடிகுண்டு நிபுணர்களும் திருவனந்தபுரம் விரைந்துள்ளனர்.
இந் நிலையில் கலாம் இன்று தமிழகம் வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications