மதுரை-வாக்கு எண்ணிக்கை அக். 17க்கு மாற்றம்
டெல்லி:
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 17ம்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுரை மத்திய தொகுதிக்கு அக்டோபர் 11ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 14ம் தேதி நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. அன்றே தேர்தல் முடிவும் வெளியாகிவிடும்.இந் நிலையில் அக்டோபர் 13 மற்றும் 15 ஆகிய இரு நாட்களில் உள்ளாட்சித் தேர்தல்நடைபெறவுள்ளது.
இதனால் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவு வெளியாகும் மறுநாளில் மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சிகளுக்கு வார்டு கவுன்சிலர்களை தேர்வுசெய்ய தேர்தல் நடக்க இருந்தது.
இந்த தேர்தல் முடிவால், இடைத்தேர்தலில் தோற்கப் போகும் கட்சிக்கு மதுரைமாநகராட்சி தேர்தலிலும் சரிவு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இதனால் கட்சிகள்மத்தியில் கலக்கம் ஏற்பட்டது.
இடைத்தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தல் சாதகமாகவும், மற்றகட்சிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும் எனவும் கருதப்பட்டது.
இதனால் மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை தள்ளி வைக்குமாறு தேர்தல்கமிஷனுக்கு கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
மேலும் மதுரை இடைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், அடுத்த மாதம் 9ம்தேதி மாலை 4 மணிக்கு பிரசாரத்தை முடிக்க வேண்டும் ஆனால், அக்டோபர் 15ல் நடக்கும் மாநகராட்சிதேர்தலுக்கு 13ம் தேதி மாலை வரை பிரசாரம் செய்யலாம்.
எனவே மதுரை மத்திய தொகுதியில் அடங்கும் 15 வார்டுகளிலும் அரசியில் கட்சிகளின் பிரசாரம் நிறுத்தப்படுமா,அனுமதிக்கப்படுமா என்ற சிக்கலும் எழுந்துள்ளது.
இது குறித்து மாநில தேர்தல் அதிகாரிகள், மத்திய தேர்தல் கமிஷனிடம் நிலைமையை எடுத்துக் கூறி என்னசெய்வது என்று விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் இடைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை 15ம் தேதிக்குப் பின்தள்ளி வைக்க வேண்டும் என்றும் மத்திய தேர்தல் கமிஷனுக்கு சிபாரிசு செய்தனர்.
இதைத் தொடர்ந்து மதுரை மத்திய தொகுதி வாக்கு எண்ணிக்கையை அக்டோபர் 17ம்தேதிக்கு மாற்றி மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் மதுரை இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் வாக்குஎண்ணிக்கை 18ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications