முஷாரபை மிரட்டி பணிய வைத்த அமெரிக்கா
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் பின் லேடன் பதுங்கியிருப்பது உறுதியாக தெரிய வந்தால் அந்நாட்டுக்குள் அமெரிக்க படைகள்அனுப்பபடும் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தோராபோரா மலைப் பகுதியில் தான் ஒசாமாபதுங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் உளவுப் பிரிவின் பாதுகாப்பில் ஒசமாபாகிஸ்தானுக்குள்ளேயே பாதுகாப்புடன் வாழ்ந்து வருவதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.ஒசாமாவைப் பிடிக்க பாகிஸ்தானுக்குள் அமெரிக்கப் படைகள் நுழைவதை அந் நாட்டு அதிபர் முஷாரப்அனுமதிக்க மாட்டார் என்றும், அப்படி அனுமதித்தால் அவரது பதவிக்கே ராணுவத்தாலும் மதவாதிகளாலும்ஆபத்து ஏற்படும் என்றும் கருதப்படுகிறது.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புஷ், ஒசாமாவைப் பிடிக்க பாகிஸ்தானுக்குள் நுழையவும் அமெரிக்காதயங்காது என்றார்.
இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து தனக்கு நேர்ந்துள்ள நெருக்கடியைஅமெரிக்காவிடம் விளக்கினார் முஷாரப்.
இந் நிலையில் சிஎன்என் தொலைக்காட்சிக்கு புஷ் அளித்த பேட்டியில், பின் லேடனை சட்டத்தின் முன் நிறுத்தஅமெரிக்கா உறுதியாக உள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் அமெரிக்காவின் வலுவானகூட்டணியாக திகழ்கிறது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பின் லேடன் மறைந்திருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். இருப்பினும்அதுதொடர்பான உறுதியான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தால் மட்டுமே அங்கு வேட்டை நடத்தப்படும்.
ஆப்கானில் தற்போது நிலை கொண்டுள்ள அமெரிக்க படையினருக்கு, பாகிஸ்தான் எல்லைக்குள் தேடுதல்வேட்டை நடத்த நாங்கள் அனுமதி தரவில்லை. இப்போதைக்கு பாகிஸ்தானுக்குள் அமெரிக்க படைகளைஅனுப்ப நாங்கள் நினைக்கவில்லை என்று பல்டி அடித்துள்ளார் புஷ்.
இந் நிலையில் அமெரிக்கா வந்துள்ள முஷாரப், அமெரிக்க அதிபர் புஷ், துணை அதிபர் டிக் செனி ஆகியோரைசந்தித்துப் பேசவுள்ளார். முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸையும் சந்தித்துப்பேசினார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஹவானாவில் நடத்திய பேச்சுக்கள் குறித்து அவரிடம்விவரித்தார்.
அமெரிக்கா மிரட்டியது: முஷாரப்
இதற்கிடையே சிஎன்என் தொலைக் காட்சிக்கு முஷாரப் அளித்த பேட்டியில்,
செப்டம்பர் 11 அன்று நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் மீது குண்டு வீசித்தாக்கப் போவதாக அமெரிக்கா எங்களை எச்சரித்தது.
தாலிபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால்பாகிஸ்தானை குண்டு வீசி அழித்து விடுவோம் என அமெரிக்கா மிரட்டியது உண்மைதான்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சராக இருந்த ரிச்சர்ட் ஆர்மிடேஜ் இதுதொடர்பாக எங்களது உளவுப்பிரிவுத் தலைவரை தொடர்பு கொண்டு மிரட்டினார்.
குண்டு வீச்சை சந்திக்கத் தயாராக இருங்கள். பாகிஸ்தானை மீண்டும் கற் காலத்திற்கு கொண்டு போகப்போகிறோம் என்று ஆர்மிடேஜ் கூறினார்.
பின்லேடன் வேட்டை என்ற பெயரில் அமெரிக்க படைகள் பாகிஸ்தானுக்குள் நுழைவதை நாங்கள்விரும்பவில்லை. அதை நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம். பின் லேடன் பாகிஸ்தானுக்குள் இருந்தால்நாங்களே அவனைப் பிடிப்போம். அதை நாங்களே பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார் முஷாரப்.
முஷாரபின் இந்தப் பேட்டியைத் தொடர்ந்தே, தேவைப்பட்டால் மட்டுமே பாகிஸ்தானுக்குள் நுழைவோம் எனஅமெரிக்க கூறியுள்ளது.
தனது அமெரிக்க பயணத்தின்போது பாகிஸ்தானை மிரட்டியதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் ரிச்சர்ட்ஆர்மிடேஜையும் முஷாரப் சந்திக்கிறார்.
மொத்தத்தில் ஒசாமா ரூபத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா விரைவிலேயே பெரும் தொல்லை கொடுக்கப்போவது மட்டும் நிச்சயமாகிவிட்டது. இதை முஷாரப் எப்படி சமாளிக்கிறார் என்பதில் தான் அவரது எதிர்காலமும்பாகிஸ்தானின் எதிர்காலமும் ஒசாமாவின் எதிர்காலமும் அடங்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications