பெரியார் அவமதிப்பு: சிவசேனா பிரமுகர் கைது
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு சந்தனம் பூசிய விவகாரத்தில், கடுமையாக கருத்துதெரிவித்தது தொடர்பாக மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜி.கே.பாலாஜி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலைக்கு கடந்த விநாயகர் சதுர்த்தி விழாவன்றுசந்தனம், விபூதி பூசி பூஜை நடத்தப்பட்டிருந்தது. இதனால் பெரும் பரபரப்புஏற்பட்டது. விஷமிகளை கைது செய்யக் கோரி திராவிடர் கழகத்தினர் போராட்டம்நடத்தினர்.இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தியதில், திண்டுக்கல்மாவட்ட சிவசேனா செயலாளர் தர்மராஜ், அக்கட்சி உறுப்பினர் மணிமாறன்ஆகியோரை கைது செய்தனர்.
இந்த நிலையில், சிவசேனாவின் மாநில இளைஞரணி அமைப்பாளராக உள்ளதிண்டுக்கல் ஜி.கே.பாலாஜி வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், நாங்கள்பெரியார் சிலையை அவமதிக்கும் செயலில் ஈடுபடவில்லை. எங்கள் மீது பொய்யானபுகார் கொடுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் நாங்கள் இதில் செயல்பட்டிருந்தால், இத்தோடு விட்டிருக்க மாட்டோம்.விளக்குமாற்றால் அடித்து, செருப்பு மாலையும் போட்டிருப்போம் என்றுகூறியிருந்தார்.
பாலாஜியின் இந்த பேட்டி குறித்து திண்டுக்கல் தி.க. வழக்கறிஞர் சங்கத் தலைவர்ஆனந்த முனீஸ்வரன் வடக்கு நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலாஜியை அழைத்து விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து அவரை திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைதுசெய்தனர். பின்னர் இன்று காலை மாஜிஸ்திரேட் ஜான்மினோ வீட்டில் ஆஜர்படுத்தியபின்னர் 15 நாள் சிறைக் காவலில் பாலாஜி வைக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications