கண்டுகொள்ளாத ஆதீனம்-குரல் தந்த அடிகளார்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகிலுள்ள கஞ்சனூர் அக்னீஸ்வர் திருக்கோயிலில் தமிழில் மந்திரம் ஓதம் செய்தார் குன்றக்குடிபொன்னம்பல அடிகளார்.
இந்தத் திருக்கோவில் மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமானது. அண்மையில் இக்கோயிலுக்கு குடமுழுக்குவிழா நடந்தது. அதில் மதுரை ஆதீனம் மற்றும் குன்றக்குடி அடிகளார் கலந்து கொண்டனர்.கும்பாபிஷேகம் நடந்தபோது வழக்கம் போல சமஸ்கிருதத்திலேயே மத்திரங்கள் ஓதப்பட்டன. எப்போதும்தமிழுக்கு வக்காலத்து வாங்கும் ஆதீனம் இதை கண்டுகொள்ளாமல் இருந்தார். இத்தனைக்கும் இவரது மடத்தின்கட்டுப்பாட்டில் தான் அந்தத் திருக்கோவிலே உள்ளது.
ஆனால், அருகே இருந்த குன்றக்குடி அடிகளார் அங்கிருந்த ஓதுவரை கூப்பிட்டு தேவார திருமுறைபாடுங்களேன் என்று குரலில் கண்டிப்புடன் சொன்னார்.
இதையடுத்து திருமுறையை பாடினார் ஓடினார். அதன பின்னரே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் அடிகளார்.
இதற்காக குன்றக்குடி அடிகளாருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், இப்போதெல்லாம்நடராஜன்-கார்த்திக்-சசிகலா என அரசியல் அவதாரம் எடுத்துவிட்ட மதுரை ஆதீனத்துக்கு தமிழ்கவலையெல்லாம் போயே போச்சு போலிருக்கிறது.
வாக்காளர் பட்டியலில் ஆதீனம் இல்லை:
இதற்கிடையே மதுரை மதுரை மத்திய தொகுதிக்கு நடக்கவுள்ள இடைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில்பெயர் சேர்க்க கோரி மனு கொடுத்தும் மதுரை ஆதீனத்தின் பெயர் விடுபட்டுள்ளது. இதையடுத்து அவர் தமிழகதலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் புகார் செய்துள்ளார்.
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட பகுதியில் தான் மதுரை ஆதீனம் மடம் அமைந்துள்ளது. ஆனாலும் இதுவரைமதுரை ஆதீனம் வாக்காளராக பெயரை பதிவு செய்ததும் இல்லை, தேர்தலில் ஓட்டளித்ததும் இல்லை. ஆனால்,சமீபகாலமாக அரசியலில் ஆர்வம் காட்டி வரும் அவர் இம்முறை தேர்தலில் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்து 2மாதத்துக்கு முன் தேர்தல் அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.
ஆனால் மத்திய தொகுதி இறுதி வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை. இதையடுத்து மதுரை ஆதீனம்தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications