உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டி
மதுரை:
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என அக் கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
கட்சியின் தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில்,பண்ருட்டி ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ராமுவசந்தன் உள்ளிட்ட கட்சியின்நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,
வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்தேபோட்டியிடுகிறது. இக்கட்சியின் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு சம்பந்தப்பட்டமாவட்ட தலைவர், செயலர் மற்றும் பொருளாளரோடு, தலைமைக் கழகத்திலிருந்துஇரண்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
நகர ஒன்றிய அளவில் வேட்பாளர்களை தேர்வு செய்ய அந்தந்த நகர, ஒன்றிய கழகநிர்வாகிகளுக்கே அதிகாரம் வழங்கப்படுகிறது. தேர்தலுக்கு குறுகிய கால அவகாசமேஇருப்பதால் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகத் துரிதமாகசெயல்பட்டு, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தேமுதிக வேட்பாளரின் வெற்றிக்குபாடுபடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பின்னப் நிருபர்களிடம் பண்ருட்டி ராமசந்திரன் கூறியதாவது:
மதுரை மத்திய தொகுதியில் தேமுதிக வேட்பாளர் யார் என்பது இன்னும் இரண்டுதினங்களில் அறிவிக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்யகுழு அமைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு பேர் போட்டியிடுகிறார்கள் என்று இப்போதுசொல்ல முடியாது.
தகுதியின் அடிப்படையில் பொது வார்டுகளிலும் பெண் வேட்பாளர்கள்நிறுத்தப்படுவார்கள். தேர்தலில் எத்தனை இடங்களைப் பிடிப்போம் என்று இப்போதுகூற முடியாது. மக்கள் எங்களை நம்புகின்றனர். மக்களின் மீது நிறைய நம்பிக்கைவைத்திருக்கிறோம்.
மிகப்பெரிய இரண்டு கட்சிகளும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால்கூட்டணிக் கட்சிகளின் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. நாங்கள் தனித்துநிற்பதை மக்கள் வரவேற்கின்றனர்.
ஊழலை ஒழிக்க எங்கள் கட்சி போராடுகிறது. அதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் தான்கருணாநிதி தேமுதிக பற்றி குறை கூறுகிறார். தூங்குபவரை எழுப்பலாம். தூங்குவதுபோல நடிப்பவரை எழுப்ப முடியாது.
தேமுதிக தான் உண்மையான திராவிட இயக்கம் என்றார் பண்ருட்டி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications