ஓடிப் போன லெஸ்பியன் தோழிகள் பிடிபட்டனர்
கோவை:
![]() |
புதுச்சேரியில் கணவர்களை தவிக்க விட்டுவிட்டு மாயமான லெஸ்பியன் தோழிகள் கோவையில் பிடிபட்டனர்.
நாங்கள் கணவருடன் வாழ விரும்பவில்லை, இருவரும் சேர்ந்து வாழவே விரும்புகிறோம் என்று போலீசிடம்கூறியுள்ளனர்.
புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்த குமரகுருவின் மனைவி அமுதா (29). இவர்களுக்கு கடந்த ஜூலைதிருமணம் நடந்தது.
விழுப்புரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜின் மனைவி கலாமேரி (28). இந்த கலாமேரி புதுவை கோபால்கடைபேட்டையை சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திருமணம் நடந்தது.
இந்த இரு பெண்களும் அய்யன்குட்டி பாளையத்தில் தனியார் லெதர் நிறுவனத்தில் வேலை செய்த வந்தபோதுஇருவருக்கும் லெஸ்பியன் உறவு ஏற்பட்டது. ஆனாலும் வீட்டினரின் கட்டாயத்தால் திருமணம் செய்துகொண்டனர். இந் நிலையில் கடந்த 15ம் தேதி இருவரும் திடீரென மாயமாயினர்.
போலீசார் நடத்திய விசாரணையில்,
லெதர் நிறுவனத்தில் வேலை செய்த போது அமுதாவுடன் கலாமேரிக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு இறுக்கமாகிஇருவருக்கும் இடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டுள்ளது.
இதனால் திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்துள்ளனர். பெற்றோர்களின் விருப்பத்திற்காக திருமணத்துக்குஒப்புக் கொண்டுள்ளனர். கல்யாணம் ஆன பிறகும், உறவை விடவில்லை. தொடர்ந்து ரகசியமாக சந்தித்துள்ளனர்.
இருவரும் எப்போதும் பிரியக்கூடாது என்பதற்காக கலாமேரியை 2வது திருமணம் செய்து கொள்ளும்படி தனதுகணவர் குமரகுருவிடம் அமுதா வற்புறுத்தியுள்ளார். அதேபோல கலாமேரியும் அமுதாவை திருமணம் செய்துகொள்ளுமாறு தனது கணவர் ஆனந்தராஜிடம் கூறியுள்ளார். இருவரின் கணவன்களும் இதை மறுத்து விட்டனர்.இதனால் கடந்த 15ம் தேதி இருவரும் ஓடிவிட்டனர். ஓடி போன் இரு தோழிகளையும் போலீசார் தேடி வந்தனர்.
இந் நிலையில், கூலி வேலை செய்வதாக கூறிக் கொண்டு கோவை இடையர்பாளையம் திருவள்ளுவர் நகரில்இருபெண்கள் அந்தப் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பது தெரியவந்தது.
அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வரமால் இருந்ததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மகளிர்போலீசில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்தனர். போலீசார் வந்து காதல் தோழிகளை பிடித்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்தியபோது இருவருமே கணவர் கொடுமைப்படுத்தியதால், வீட்டை விட்டுவெளியேறினோம். அவர்களுடன் வாழ பிடிக்கவில்லை. நாங்கள் சேர்ந்து வாழ விரும்புகிறோம். எங்களுக்குபாதுகாப்பு தர வேண்டும்.மேலும் எங்களை கணவர்ளுடன் சேர்த்து வைக்க நினைத்தாலோ, எங்களது நட்பை பிரிக்க நினைத்தாலோதற்கொலை செய்து கொள்வோம் என கூறியுள்ளனர்.
இவர்கள் இருவருரையும் கோவையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும்அரியாகுப்பம் போலீசுக்கும், இருவரது பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அவர்ளது உறவினர்கள் கோவை வந்தனர். அரியாகுப்பம் போலீசாரும் வந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications