அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்
சென்னை:
தமிழக உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுக கூட்டணி கட்சிகள் இன்று முடிவு செய்யவுள்ளன.
தமிழக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 13, 15ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுவரை 24,748 பேர்மனுத்தாக்கல் செய்துள்ளனர். வரும் புதன் கிழமையுடன் வேட்பு மனுத்தாக்கல் முடிகிறது.அதிமுக, திமுக கட்சிகள் உள்ளாட்சி பதவிகளை பகிர்ந்து கொள்வது குறித்து கடந்த சில தினங்களாக பேச்சுநடத்தி வருகின்றன.
திமுக கூட்டணியை பொறுத்தவரை அந்தந்த மாவட்ட குழுக்கள் பிற கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றன.தலைவர்கள் இடப்பங்கீடு செய்து கொள்வதை பொறுத்து மாவட்டங்களிலும் இடம் பகிர்ப்பு நடைபெறும்.
மேயர் மற்றும் நகரசபை தலைவர் உள்ளிட்ட தலைவர் பதிவிகளில் யாருக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்துஇன்று முடிவு செய்யப்படுகிறது. இன்று மாலை அல்லது நாலை திமுக கூட்டணி தலைவர்கள் உடன்பாட்டில்கையெழுத்திட உள்ளனர்.
திமுக 55%, காங்கிரஸ் 20%, பாமக 10%, கம்யூனிஸ்ட்டு கட்சிகள், முஸ்லிம் லீக்குக்கு மொத்தமாக 15% இடங்கள்ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. திமுக 65% இடங்களில் போட்டியிட விரும்பியது. ஆனால், மற்ற கட்சிகளும்அதிக இடங்கள் கேட்பதால் தனது இடங்களை குறைத்துக் கொள்ள முன் வந்துவிட்டது.
அதே போல அதிமுக கூட்டணியில் கடந்த 2 தினங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் யார், யாருக்கு எந்தெந்தஇடங்களில் வெற்றி வாய்ப்புள்ளது என்று தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
எனவே அதிமுக கூட்டணி இடப் பங்கீடு இன்று முடிந்துவிடும் என்று தெரிகிறது.
மேயர் மற்றும் நகரசபை தலைவர் பதவிகள் குறித்து மதிமுகவும் விடுதலை சிறுத்தைகளும் அதிகமான ஆர்வம்காட்டவில்லை என்பதால் அதிமுகவுக்கு அதிக சிக்கல் இல்லை.
ஆனால், கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களை கூடுதலாக பெற இரு கட்சிகளும் அதிமுகவை நெருக்கிவருகின்றன.
அதிமுக 80% வரையிலான இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாகத் தெரிகிறது.
தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்ட விஜய்காந்தை தான் திமுகவும் அதிமுகவும் கவலையோடுபார்க்கின்றன. உள்ளாட்சித் தேர்தலில் உள்ள எல்லா பதவிகளுக்கும் (சுமார் 1 லட்சம் பதவிகள்) வேட்பாளர்களைநிறுத்தும் முடிவில் இருக்கிறார் விஜய்காந்த்.
இதனால் கழகங்கள் அதிர்ந்து போய் உள்ளன. அந்த கட்சி ஒன்றிய நகர மற்றும் கிராம அளிவில் குழுக்களைஅமைத்து விண்ணப்பங்களை வாங்கி வருகிறது.
வேட்பாளர்களை தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட குழுக்களுக்கு விஜய்காந்த் அதிகாரம் வழங்கியுள்ளார்.எனவே விஜய்காந்த் கட்சி வேட்பாளர்கள் திங்கள்கிழமை முதல் மனுத் தாக்கலில் ஈடுபடுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications