ராமேஸ்வரம் கோவிலில் 739 கலசங்கள் மிஸ்ஸிங்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் 739 தாமிர கலசங்கள் காணாமல் போயுள்ளன. இதையடுத்துகோவிலின் அதிகாரியொருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலின் 1008 கலசங்களில் 739 கலசங்கள் காணாமல் போயிருப்பது பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவை ஒரே நேரத்தில் திருடப்படவில்லை என்று தெரிகின்றன. பல காலமாக ஒவ்வொன்றாக திருடப்பட்டிருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கோவிலியின் நிர்வாக அதிகாரி மகாதேவன் கூறுகையில்,
கோவிலின் 1008 கலசங்களும் நாராயண ஐயர் என்பவரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தன. இந் நிலையில் வடஇந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கோவிலில் 1008 கலச பூஜைகள் நடத்த பணம் கட்டினர்.
இதையடுத்து கலசங்களை எடுத்தபோது அதில் 739 கலசங்களைக் காணவில்லை. 269 கலசங்கள் மட்டுமேஇருந்தன. ஒவ்வொரு கலசமும் 200 கிராம் எடை கொண்டது. இவற்றின் மதிப்பு ரூ. 25,000 ஆகும் என்றார்.
கலசங்கள் காணாமல் போனதை மறைத்த கோவில் ஊழியர்கள் 269 கலசங்களைக் கொணடே பூஜை நடத்தலாம்என அந்த வட இந்திய குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். ஆனால், அதை ஏற்க மறுத்த அக் குடும்பத்தினர்கோவில் அதிகாரிகளிடம் புகார் தந்தனர்.
இதையடுத்தே கலசங்கள் காணாமல் போன விவரம் வெளியில் வந்தது.
இதைத் தொடர்ந்து நாராயண ஐயரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப்பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications