கருணாநிதிக்கு இது தேவையா?: ஜெ கோபம்
மதுரை:
சிக்குன் குனியாவால் மக்கள் அவதிப்பட்டும்போது கருணாநிதிக்கு பாராட்டு விழா தேவையா என அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,4 மாதங்களுக்கு முன்பு கருணாநிதி ஆட்சி வந்ததும், கூடவே வந்து விட்டது சிக்குன் குனியா என்னும் தொல்லைநோய். தினசரி இரண்டு மூன்று என்று அளவில் விலை மதிக்க முடியாத மனித உயர் இழுப்பு ஏற்பட்டுவருகின்றது. இதுவரை கிட்டத்தட்ட 250 பேருக்கு உயிரிழந்திருக்கிறார்கள்.
உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்ட ஒரு குடும்பத்தினரையாவது கருணாநிதி இதுவரை நேரில் சந்தித்து ஆறுதல்கூறியதுண்டா? அவரது சக அமைச்சர்களாவது நேரில் போய் ஆறுதல் கூறிய துண்டா? உயிரிழந்தவர்களுக்குஇழப்பீடோ, நிவாரணமோ அளிக்க முன் வந்ததுண்டா? இவ்வளவு அவலங்கள் தொடர் கதையாக நீடிக்கின்றன.
ஆனால் இன்று வரை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சிக்குன் குனியா நோயினால் ஒருவர் கூட சாகவில்லைஎன்றே சாதிக்கிறார். இறந்தவர்களின் பெயர்களையும், விலாசங்களையும் நான் வெளியிட்ட பின்னரும். அதையும்வெட்கம் இல்லாமல் பொய் என்கிறார். இங்கோ, திரைப்படத் துறைக்கு கருணாநிதி சலுகை அளித்து விட்டதாகக்கூறி அதற்கு ஒரு பாராட்டு விழா எடுக்கிறார்கள்.
சிக்குன் குனியா நோயினால் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்நிலையிலும், 250க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்து இருக்கும் நிலையிலும், இப்படிப்பட் ஒரு துயர நிகழ்ச்சிஅன்றாடம் நிகழ்ந்து கொண்டு வரும் நிலையிலும், திரைப்படத் துறையினர் நடத்தும் பாராட்டு விழாவை தானேமுன் வந்து தவிர்ப்பதை விட்டு விட்டு அதில் கருணாநிதி மகிழ்ச்சியோடு கலந்து கொள்வது மிகுந்தவேதனைக்குரியதாகும்.
யாராவது பாராட்டு விழா நடத்துகிறோம் என்றாலும் ஓடுகிறார். விருது வழங்குகிறோம் வாருங்கள் என்றாலும்அதன் பின்னணி அறியாமல் ஓடோடிச் சென்று நடுநாயகமாக அமர்ந்து கொண்டு பாராட்டு மழையில்நனைகிறார்.
ஒரு நல்ல பொறுப்புணர்வுமிக்க முதல்வராக இருந்தால் இத்தகைய சூழலில் இது போன்ற விழாக்கள் வேண்டாம்என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் கருணாநிதி அப்படி சொல்லவில்லை என அவர் கூறியுள்ளார்ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications