பாமக போர் கொடி-திமுக கூட்டணியில் விரிசல்
திருச்சி:
திமுக கூட்டணி பிளவு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் திருச்சியில் தனித்துப் போட்டியிடப் போவதாகபாமக அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகளுடன் ஆற்காடு வீராசாமிதலைமையிலான குழு ஒரு வாரமாக பேச்சு நடத்தி வந்தது. பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சியினர் பல சுற்று பேச்சு நடத்தினர்.அதே போல மாவட்ட அளவில் கூட்டணிக் கட்சிகளுடன் அந்தந்த மாவட்ட திமுக தலைவர்களும்அமைச்சர்களும் பேச்சு நடத்தி வந்தனர்.
பேச்சுவார்த்தை சுமூகமாக நடப்பதாகவும் இன்று பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றுதிமுக தரப்பு கூறியது. ஆனால், உண்மையில் பேச்சுவார்த்தையில் பெரும் இழுபறியும் மோதலும் நடந்து வந்ததுவெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருச்சி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ஒரே ஒரு சீட்டை மட்டும் பாமகவுக்கு ஒதுக்க திமுக முன்வந்துள்ளது. இங்கு பாமகவுக்கு சொந்த பலம் ஏதுமில்லை.
ஆனாலும், இங்கு அதிகமான இடங்களைக் கேட்டு பாமக தகராறு செய்தது. அதை திமுக ஏற்க மறுத்ததால்திருச்சியில் தனித்துப் போட்டியிட்டுக் கொள்வதாக பாமக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திருச்சியில் நிருபர்களிடம் பேசிய பாமக துணைத் தலைவர் கேசவ ராமலிங்கம்,
திருச்சியில் எங்களுக்கு ஒரே ஒரு சீட்டை மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்துள்ளது. திமுக மாவட்டச்செயலாளரும் போக்குவரத்து அமைச்சருமான நேரு எங்களுடன் நேற்று பேச்சு நடத்தினார். அப்போது ஒரே ஒருசீட்டை மட்டும் தருவதாக நேரு சொன்னார். திருச்சியில் பாமகவே இல்லையே என்றார்.
விழுப்புரம், ஜெயங்கொண்டம் போன்ற உங்கள் கட்சி பலமுள்ள இடங்களில் கூடுதல் சீட் கேளுங்கள், திருச்சியில்கேட்காதீர்கள் என்றார். இது கூட்டணி தர்மத்துக்கு விரோதமானது.
இதனால் அவரை கண்டித்து நாங்கள் பாதியிலேயே பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டோம்.ஆனாலும் இன்று வரை எங்களை பேச்சுவார்த்தைக்கு திமுக மீண்டும் அழைக்கவில்லை.
இது குறித்து எங்கள் தலைமையிடம் (ராமதாஸ்) பேசினோம். திருச்சியில் தனித்தே போட்டியிட தயாராகுமாறுஎங்கள் தலைமை கூறிவிட்டது. இதனால் திருச்சியில் நாங்கள் தனித்தே போட்டியிடுகிறோம். திமுகவுடன்கூட்டணி இல்லை என்றார்.
பாமகவின் மாநில துணை பொதுச் செயலாளர் முத்து கூறுகையில், பாமகவை திமுகவினர் மதிப்பதே இல்லை.திருச்சியில் நடந்த திமுக மாநில மாநாட்டிலும் எங்களை கேவலமாக நடத்தினர். இப்போது அரசு விழாக்களிலும்பாமகவை திமுக கண்டு கொள்வதே இல்லை என்றார்.
என்னமோ புகையுதே...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications