திமுக-அதிமுக வேட்பாளர்கள் மீது ஆணையம் புகார்
மதுரை:
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக வேட்பாளர் கவுஸ் பாட்ஷா, அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாமீது தேர்தல் அதிகாரி மூக்கையா புகார் தெரிவித்துள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் இடைத் தேர்தல் வரும் 11ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலின்போது திமுக வேட்பாளர் கவுஸ் பாட்ஷா, அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் விதிகளை மீறிஏராளமான வாகனங்கள், தொண்டர்களுடன் வந்ததனர்.வேட்பாளருடன் கட்சி நிர்வாகிகள் கூட்டமாக தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்குள் புகுந்ததனர்.
இது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் என்றும், இது பற்றி தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவிக்கப்படும்என்றும் தேர்தல் அதிகாரி மூக்கையா தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் மத்திய தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. பின்னர்தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறியதாவது,
திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தேர்தல் விதிமுறைக்கு மாறாகஅதிகமான ஆதரவாளர்களுடனும், ஏராளமான வாகனங்களிலும் வந்திருந்தனர். இந்த விதிமுறை மீறல் குறித்துஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனை பரிசீலித்து தலைமை தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும். ஆனால் இதற்காக தேர்தல் ரத்து செய்யும்நிலை ஏற்படாது. ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாநகராட்சியில் உள்ள 15 வார்டுகளைகொண்டது தான் மதுரை மத்திய தொகுதி. இடைத் தேரத்ல் வரும் 11ம் தேதி நடைபெறுவதால் அங்கு 9ம் தேதிமாலையுடன் பிரசாரத்தை முடிக்க வேண்டும். அதன் பின் தேர்தல் சின்னத்தை பயன்படுத்தியோ, கட்சிஅடிப்படையிலோ பிரசாம் செய்யக்கூடாது. அதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் காரணமாக 15 வார்டுகளிலும் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் பாதிக்கப்படுவது குறித்து நான் எதுவும் கூறமுடியாது. மத்திய தேர்தல் கமிஷனக் மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் தேதியை அறிவித்த பின்னர் தான்மாநகராட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. எனவே இதில் உள்ளாட்சி தேர்தல் கமிஷன் தான் முடிவு எடுக்கவேண்டும் என அவர் கூறினார்.
விசேஷ பணி அதிகாரியாக எஸ்.பிரகதா:
இதற்கிடையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உதவுவதற்காக விஷேச பணி அதிகாரியாக எஸ்.பிரகதாநியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு தேர்தல் துறையில் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிவர் எஸ்.பிரகதா. கடந்த 2மாதங்களுக்கு முன்புதான் இவரது பதவிகாலம் முடிந்தது. இந் நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்குஉதவுவதற்காக விசேஷ பணி அதிகாரியாக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இவர் நேற்று சென்னை கோட்டையில் பதவி ஏற்றுக்கொண்டார்.
வன்முறை நடந்தால் மறுவாக்கு பதிவு:
உள்ளாட்சி தேர்தலில் வன்முறை எதுவும் நடந்தால் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் பார்வையாளர்களுக்குஅதிகாரம் உண்டு என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளர்களுடன் 2வது கட்டமாக மாநில தேர்தல் கமிஷனர்சந்திர சேகரன் இன்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தேர்தல் பார்வையாளர்கள் மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோருடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைநடத்துவார்கள். வன்முறை நடந்தால் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் பார்வையாளர்களுக்கு அதிகாரம் உண்டு.பதட்டமான வாக்குச் சாவடிகளில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்கள்.
மதுரை மத்திய தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன்ஆலோசித்து அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications