சென்னை-ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
சென்னை:
சென்னை பட்டாபிராம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். இன்னொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டூரைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (45). இவரது மனைவி மார்க்ரெட்மணிமேகலை (42). ரயில்வே ஊழியரான ஞானப்பிரகாசத்துக்கு தெய்வீகராஜன் (20), அற்புதராஜ் (18),நித்தியராஜ் ஆகிய 3 மகன்கள்.ஞானப்பிரகாசத்தின் அண்ணன் ஜெயராமன் (58). இவர் ஐசிஎப்பில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரதுமனைவி கெளரி (55). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ஞானப்பிரகாசத்தின் குடும்பத்தினரும்ஜெயராமனின் குடும்பத்தினரும் கூட்டாக வசித்து வந்தனர். ஜெயராமன் மத போதகராக இருந்து வந்தார்.
இதில் நித்தியராஜ் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு பலியாகிவிட்டார். அவருக்கு சிகிச்சை அளித்ததில் ஏகப்பட்டசெலவாகி குடும்பம் வறுமையில் இருந்தது. இந் நிலையில் தெய்வீகராஜனுக்கும் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது.உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தெய்வீகராஜன். ஏகப்பட்ட கடன் வாங்கி செலவுசெய்து அவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் அவரை வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டனர்.
இரண்டாவது மகனும் கொஞ்சம் கொஞ்சமாய் சாவை நெருங்கி வருவதால் மனம் நொந்து போன பெற்றோரும்பெரியப்பாவும் தெய்வீகராஜனுக்குத் தெரியாமல் நேற்று நள்ளிரவில் விஷம் குடித்தனர். அற்புதராஜும் விஷம்குடித்தார்.
5 பேரும் காலையில் வாயில் நுரை தள்ளியபடி கிடப்பதைப் பார்த்து பதறிய தெய்வீகராஜன் கதறி அழுதார்.இதைக் கேட்டு அண்டை வீட்டினர் ஓடி வந்தனர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் வந்து பார்த்தபோது ஜெயராமனைத் தவிர மற்ற 4 பேரும் இறந்துவிட்டது தெரியவந்தது. ஜெயராமன்மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்சேர்க்கப்பட்டுள்ளார்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது சொந்தங்கள் அனைவரையும் இழந்துவிட்டு நிற்கிறார் தெய்வீகராஜன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications