விஜய்காந்த் சொல்வது பொய்-தேர்தல் ஆணையம்
சென்னை:
முரசு சின்னம் பற்றி விஜய்காந்த் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என மாநில தேர்தல் கமிஷன்விளக்கமளித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலின் சின்னப் பட்டியலில் முரசு சின்னமே இல்லை. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி தான்காரணம் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசில் தனது செல்வாக்கைபயன்படுத்தி முரசு சின்னத்தை அவர் காலி செய்துவிட்டதாக விஜய்காந்த் கூறியுள்ளார்.இந் நிலையில் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சட்டசபை தேர்தலில் கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் முரசு சின்னம் பெற முடிந்தது என்றும் ஆனால்உள்ளாட்சி தேர்தலில் அந்த சின்னமே பட்டியலில் இல்லாமல் செய்து விட்டனர் என்று தேமுதிக தலைவரும்,நடிகருமான விஜய்காந்த் பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது உண்மைக்கு புறம்பானது.
எந்த ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியில் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்சின்னங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் எந்தவிதமான தலையீடோ அல்லது குறுக்கீடோ இல்லை.
பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அனைத்து அரசியில் கட்சிகளுக்கும் சுயேச்சை சின்னங்கள்ஒதுக்கீடு செய்ததில் சுயேச்சை வேட்பாளர்களை விட முன்னுரிமை வழங்குப்படும். இதற்காக அவர்கள் 70சுயேச்சை சின்னங்களில் தங்கள் விரும்பும் சின்னங்களில் ஏதேனும் மூன்றினை தேர்ந்து எடுத்து முன்னுரிமைஅடிப்படையில் வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும்.
தேர்தல் நடத்தும் அலுவலரால் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் போது முதலில் பதிவு செய்யப்பட்ட ஆனால்அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி வேட்பாளர்களாக இருந்தால் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்துமுடித்த பின்னரே, மீதமுள்ள சுயேச்சை சின்னங்களை கொண்டு சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள்ஒதுக்கீடு செய்யப்படும்.
எந்த ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியில் கட்சிகளுக்கும் அவரவர் விருப்பபடிசின்னங்கள் ஒதுக்க இயலாது என தெரிவிக்கப்படுகின்றது என அதில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் பண்ருட்டி ராமச்சந்திரன்:
இந் நிலையில் தங்களுக்கு முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என மத்திய தேர்தல் ஆணையத்திடம் தேமுதிகவலியுறுத்தியுள்ளது.
கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கு.ப.கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் அடங்கியமுக்கிய நிர்வாகிகள் டெல்லி விரைந்தனர். மத்திய தேர்தல் ஆணையர்களை சந்தித்து முரசு சின்னத்தைஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
ஏர்-உழவனுக்கும் பிரச்சனை:
இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலில் ஜனதா கட்சிக்கு அதன் ஏர்-உழவன் சின்னம் ஒதுக்கப்படவில்லை. இதைஎதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக அதன் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications