இட ஒதுக்கீடு அறிக்கை இன்று பிரதமரிடம் தாக்கல்
டெல்லி:
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அறிக்கையை வீரப்ப மொய்லி குழு இன்று பிரதமர்மன்மோகன் சிங்கிடம் சமர்பிக்கிறது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு செய்யும் மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தது.இந்த மசோதா தாக்கலாக முக்கிய காரணமாக இருந்த மத்திய மனிதவளத்துறைஅமைச்சர் அர்ஜூன் சிங்குக்கு எதிராக டெல்லியில் ஒரு பிரிவு மாணவர்கள்போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து இட ஒதுக்கீட்டை பிறர்க்கு பாதிப்பில்லாமல் அமல்படுத்துவது குறித்துஆராய மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கர்நாடக முதல்வருமான வீரப்பமொய்லி தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் பிரதமர்.
இந்தக் குழு தனது இடைக்கால அறிக்கையை பிரதமரிடம் சமர்பித்துவிட்டது. அதன்அடிப்படையில் தான் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்டவர்களில் வசதியான பிரிவினருக்கு (கிரீமிலேயர்) இட ஒதுக்கீடு அளிப்பதா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.மொத்தமாக பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்றே கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் தனது குழுவின் இறுதி அறிக்கையை கடந்த 15ம் தேதியே தாக்கல்செய்ய இருந்தார் வீரப்ப மொய்லி. ஆனால், அதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்துஇன்று தனது அறிக்கையை பிரதமரிடம் தருகிறார் மொய்லி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications