மதுரை இடைத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி பாஜக சார்பில்பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்டோபர் 3ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக தலைமை தேர்தல்அதிகாரிக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை நகர பாஜக தலைவர் சசிகுமார் தாக்கல் செய்த அந்த பொது நல வழக்கில்,

மதுரை மத்திய தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 11ம் தேதி நடக்கிறது.இதற்கான பிரசாரம் 9ம் தேதி மாலை 5 மணியுடன் முடிகிறது. மதுரைமாநகராட்சிக்கான உள்ளாட்சித் தேர்தல் 15ம் தேதி நடக்கிறது. அதற்கான பிரசாரம்13ம் தேதி மாலை முடிகிறது.

மதுரை மத்திய தொகுதியில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகள் (வார்டுஎண் 29 முதல் 43 வரை) உள்ளன. 9ம் தேதி மாலை 5 மணியுடன் மதுரை மத்தியதொகுதிக்கான பிரசாரக் கெடு முடிவடைந்தாலும் இந்த தொகுதிக்குள் அடங்கிய 15வார்டுகளுக்கான பிரசாரம் தொடர்ந்து நடைபெறும்.

மத்திய தொகுதிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்க மக்கள் யோசித்து முடிவெடுக்கவழங்கப்படும் கால அவகாசத்தில் மாநகராட்சி தேர்தல் பிரசாரம் என்ற பெயரில்அரசியல் கட்சியினர் தங்கள் கொடிகளையும், சின்னங்களையும் காட்டி பிரசாரம்செய்வார்கள்.

இதனால் மத்திய தொகுதி மக்களுக்கு அமைதிக் காலம் மறுக்கப்படும் விதமாகதொடர்ந்து பிரசாரம் நடைபெறும்.

இத்தகைய சூழலில் மத்திய தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது சட்டவிரோதமானது . மத்திய தொகுதிக்கான தேர்தலை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்அல்லது அந்த தொகுதிக்கு உட்பட்ட 15 வார்டுகளின் தேர்தலை வேறு தேதிக்கு மாற்றவேண்டும்.

மத்திய தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் அல்லது அந்ததொகுதிக்கான தேர்தலை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்.

அதுவரை 11ம் தேதி மத்திய தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலுக்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஜி.ராஜசூர்யா ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச், இது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி அக்டோபர் 3ம்தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

ராஜன் செல்லப்பாவுக்கு எதிராக வழக்கு:

இதற்கிடையே மதுரை மத்தியத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாதேர்தலில் நிற்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலவழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் முத்துராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில்,

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட தடைவிதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மாற்ற வேண்டும் என்று நாடுமுழுவதுமே குரல் எழுந்துள்ளது.

வழக்கறிஞர் என்ற முறையில் அரசியலில் கிரிமினல்கள் நுழையக் கூடாது என்றஎண்ணத்தில் இந்த பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளேன்.

மதுரை மத்தியத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா மனுதாக்கல் செய்துள்ளார். தன் மீது ஏதாவது வழக்குகள் உள்ளனவா என்று வேட்புமனுவில் வேட்பாளர் தெரிவிக்க வேண்டும்.

ஆனால், தன் மீதான கிரிமினல் வழக்கை ராஜன் செல்லப்பா வேட்பு மனுவில்தெரிவிக்காமல் மறைத்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை குண்டு வைத்துதகர்க்க திட்டமிட்டதாக ஷேக்தாவுத் என்பவர் மீது 1995ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இதையடுத்து கைதான ஷேக் தாவுத் நீதிமன்றத்தில் தந்த வாக்குமூலத்தில், கோவிலில்குண்டு வைக்க ராஜன் செல்லப்பா தான் என்னைத் தூண்டினார் என்று வாக்குமூலம்தந்துள்ளார்.

இந் நிலையில் மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ள மதுரையில் ராஜன்செல்லப்பா போட்டியிடுவது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும்ஏற்படுத்தியுள்ளது.

எனவே இவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம்கோரினேன். ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதனால் நீதிமன்றம் தலையிட்டு ராஜன் செல்லப்பா போட்டியிட தடை விதிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் முத்துராமலிங்கம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+