பீதியை கிளப்பும் ஜெயலலிதா- ப.சி தாக்கு
காரைக்குடி:
உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிக வெற்றி பெற வாய்ப்பில்லை என நிதியமைச்சர் ப.சிதம்பரம்கூறினார்.
காரைக்குடி வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான் முதலில் இருந்து கூறி வந்ததைப் போலவே தான் முடிவும் அமைந்தது.
திமுக, அதிமுக மற்றும் அவற்றின் கூட்டணி கட்சிகளை விரும்பாத வாக்காளர்களில் சிலர் மூன்றாவது அணிதேவை என்ற நோக்கத்தில் தேமுதிகவிற்கு ஓட்டளித்தார்கள். உள்ளாட்சித் தேர்தலிலும் அதே போலவாக்களித்தாலும் திராவிட கட்சிகள் இரண்டுக்குமே தோல்வி கிடைக்கப் போவதில்லை.
சட்டசபை தேர்தலில் தேமுதிக ஒவ்வொரு தொகுதியிலும் 10 முதல் 15 சதவீத ஓட்டுகள் தான் பெற்றது. அதேசதவீத ஓட்டுகளால் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக வெற்றி பெற வாய்ப்பில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளான இலவச கலர் டிவி, இரண்டு ஏக்கர்நிலம், விவசாயக் கடன் தள்ளுபடி போன்றவைகளை மக்களிடம் எடுத்து சென்றாலே போதும். திமுக கூட்டணிஎளிதாக வெற்றி பெற்றுவிடும்.
ஆனால், இந்தச் சாதனையை அதிமுக எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்று தெரியவில்லை. இந்தத் தேர்தலில்திமுக கூட்டணியின் பிரச்சாரம் மிக வலிமையாக இருக்கும்.
சிக்குன் குனியா நோய் நாடு முழுவதும் உள்ள பிரச்சனை. இந்த நோயால் தமிழகத்தில் மக்கள் இறந்ததாகஜெயலலிதா பீதியை கிளப்பி வருகிறார். சிகிச்சை அளிப்பதில் குறை இருந்தால் அதை சுட்டிக் காட்டலாம். அதைவிட்டுவிட்டு மக்கள் இறந்து வருவதாக பீதியை கிளப்புவது ஜெயலலிதாவுக்கு அழகல்ல என்றார் ப.சிதம்பரம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications