மப்பில் தண்டவாளத்தில் லாரி ஓட்டியவர் கைது
சென்னை:
குடிபோதையில், ரயில் தண்டவாளத்தில் டேங்கர் லாரியை ஓட்டிய நபரை போலீஸார்கைது செய்தனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர் அனில்குமார். டேங்கர் லாரிகளை வைத்து வாடகைக்குவிட்டு வருகிறார். இவரது லாரி ஒன்றை டிரைவர் வடிவேல் என்பவர் சென்னைமணலிக்கு எண்ணையை ஏற்றிச் செல்வதற்காக கொண்டு வந்திருந்தார். அவருடன்கிளீனர் ரமேஷ் என்பவரும் வந்திருந்தார்.வந்த இடத்தில் இருவரும் மது அருந்தினர். பின்னர் டிரைவர் வடிவேல் லாரியிலேயேபடுத்துத் தூங்கி விட்டார். போதையில் இருந்த ரமேஷுக்கு லாரியை ஓட்டிப் பார்க்கும்ஆசை வந்தது.
இதையடுத்து லாரியை எடுத்த அவர் வேகமாக ஓட்டிச் சென்றார். எங்கு போகிறோம்என்பது கூடத் தெரியாமல் படு வேகமாகவும், தாறுமாறாகவும் அவர் லாரியைஓட்டியுள்ளார்.
திருவொற்றியூர் வரை அவர் வந்து விட்டார். அப்போது மணி இரவு 10.30.ராயபுரத்தில் லாரி நுழைந்த போது போலீஸார் லாரியை நிறுத்துமாறு சிக்னல்காட்டினார். ஆனால் போலீஸாரைப் பார்த்ததும் பயந்து போன ரமேஷ் லாரியைநிறுத்தாமல் வேகமாக ஓட்டினார்.
இதையடுத்து ஆட்டோ ஒன்றில் போலீஸார் லாரியை துரத்தினர். ரமேஷும் லாரியைநிறுத்தாமல் சென்டிரல் ரயில் நிலையம் வரை வந்து விட்டார். அங்கிருந்து பல்லவன்சாலைக்குள் நுழைந்த அவர் லாரியை சிந்தாதிரிப் பேட்டை கூவம் ஆற்றையொட்டிவேகமாக செலுத்தினார்.
அங்கு பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வேகமாக லாரிவருவதைப் பார்த்ததும் அலறி அடித்து எழுந்தோடினர். கூவம் சாலையிலிருந்துஇறங்கிய லாரி, மத்திய சிறையின் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில்இறங்கியது. தண்டவாளத்தில் லாரியை ஓட்டத் தொடங்கினார் ரமேஷ்.
மொத்தம் உள்ள 3 தண்டவாளங்களில், 3வது தண்டவாளத்தில் லாரியை செலுத்தினார்ரமேஷ். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 500 மீட்டர் தூரம் வரைலாரியை ஓட்டினார் ரமேஷ். ஆனால் அதற்குள் மேல் அவரால் ஓட்ட முடியவில்லை.
இருந்தாலும் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ரமேஷ், படு குஷியாகலாரியை முன்னுக்கு ஓட்டுவதும், ரிவர்ஸ் எடுத்து வருவதுமாக விளையாட்டு காட்டத்தொடங்கினார்.
அதற்குள் ரயில்வே போலீஸார், உள்ளூர் போலீஸார், பொதுமக்கள் எனநூற்றுக்கணக்கானோர் கூடி விட்டனர். ரமேஷின் செயலைப் பார்த்த பொதுமக்கள்வேடிக்கை பார்த்தவண்ணம் நின்றனர். அவர்களில் சிலர் லாரி மீது கல்வீசி ரமேஷைகீழே இறங்கி வருமாறு குரல் கொடுத்தனர்.
சரமாரியாக கற்கள் பறக்கவே பயந்து போன ரமேஷ் என்ன செய்வதென்று தெரியாமல்குழம்பினார். அப்போது இன்ஸ்பெக்டர் சின்ராம் என்பவர் லாரியில் ஏறி ரமேஷைவலுக்கட்டாயமாக கீழே இறக்கினார். அப்போது குடிபோதை அதிகமாக மயக்கநிலைக்கு சென்று விட்டார் ரமேஷ்.
அவரையும் ஏற்கனவே மப்பில் மயங்கித் தூங்கிக் கிடந்த வடிவேலையும் அங்கிருந்துதூக்கிக் கொண்டு வந்த போலீஸார் இருவரையும் தண்ணீர் தெளித்து எழுப்பினர்.அவர்கள் இருவரையும கூடியிருந்த பொதுமக்கள் அடிக்க பாய்ந்தனர். அவர்களைபோலீஸார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் இருவரையும் அங்கிருந்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.தண்டவாளத்தின் நடுவே நின்று கொண்டிருந்த லாரியை கிரேன் மூலம் தூக்கிஅப்புறப்படுத்தினர். இந்த களேபரம் முடியும் வரை அந்த வழியாக ரயில்கள் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
அதிகாலை 4 மணிக்குத்தான் இந்த களேபரம் முடிவுக்கு வந்தது. ரமேஷையும்,வடிவேலையும் போலீஸார் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தால் மணலியிலிருந்து கடைசியாக ரயில் தண்டவாளத்தில் லாரி ஏறும்வரை உள்ள இடங்களில் பெரும் பரபரப்பு நிலவியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications