நடு வானில் விமானங்கள் மோதல்: 155 பேர் பலி?

Subscribe to Oneindia Tamil

சாவோ பாலோ:

பிரேசிலில், அமேசான் காட்டின் மீது நடு வானில் இரு விமானங்கள் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில்பயணிகள் 155 பேரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பிரேசில் நாட்டின் அமேசான் நகரில் உள்ள மனோஸ் விமான நிலையத்திலிருந்து 149 பயணிகள், 6ஊழியர்களுடன் விமானம் ஒன்று தலைநகர் பிரேசிலியாவுக்கு கிளம்பியது. இந்த விமானம், பீக்ஸோடோ டிஅசெவேடோ என்ற இடத்தில் வந்தபோது விமானத்துக்கும், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கும் இடையேயானரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த விமானம் என்ன ஆனது என்று தேடும் பணி தொடங்கியது. இந்த நிலையில்தான்அமேசான் காட்டின் மீது அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, எதிரே குறுக்கிட்ட சிறு விமானம்ஒன்றுடன் மோதியது தெரிய வந்தது.

இந்த விபத்தில் பெரிய விமானத்தில் பயணித்த 155 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்கள்அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.விமானத்தில் பயணித்து காணாமல் போயுள்ள 155 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஜரீனாஎன்ற இடத்தில் விபத்தில் சிக்கியவர்கள் மாட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே இப்பகுதியில்தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+