பட்டாசு விற்பனைக்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு
சென்னை:
சென்னையில் பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு விற்பனைக்குபல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை உயர்நீதிமன்றம்விதித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ராமசாமி என்பவர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், சென்னை நகரில் அனுமதியில்லாமல், நடைபாதைகளிலும்,தெருக்களிலும், சாலையோரங்களிலும் பட்டாசுக் கடைகள்போடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துருஆகியோர் அடங்கிய பெஞ்ச் சென்னை நகரில் பட்டாசுவிற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீர்ப்பளித்தனர்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தடையில்லாசான்றிதழ் பெற்ற பிறகுதான் அதிகாரிகள் பட்டாசுகளை விற்பதற்குஉரிமம் வழங்க வேண்டும்.
உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ள மனுவில் சுட்டிக் காட்டியுள்ளஇடத்தை வெடிமருந்து துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுநடத்த வேண்டும். வெடிமருந்து சட்ட நடைமுறைகள்பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்த பிறகுதான்விற்பதற்கும், கடைகளை வைப்பதற்கும் அனுமதி வழங்கவேண்டும்.
இரு பட்டாசுக் கடைகளுக்கு இடையே 15 மீட்டர் இடைவெளிஇருக்க வேண்டும். உரிமம் பெற்ற இடத்தைத் தவிர வேறு எங்கும்கடை போடக் கூடாது.
பொது இடங்களில், சாலைகளில், தெருக்களில் கடைகள் வைக்கக்கூடாது. கடைக்கு முன்பு கூடாரம் போடக் கூடாது. தீபாவளி போன்ற பண்டிகை காலத்தின்போது பட்டாசுகளை எப்படிகையாள வேண்டும், வெடிக்க வேண்டும் என்பது குறித்தவிவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்.
நடப்பு தீபாவளிக்கு, ஏற்கனவே பட்டாசு விற்க உரிமம்பெற்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:
கடைகளில் ஆயிரம் கிலோவுக்கு மேல் பட்டாசுகளை வைக்க்ககூடாது. பட்டாசு கடைகளில் தண்ணீர் தொட்டிகள், தீயணைப்புகருவிகளை வைத்திருக்க வேண்டும்.
உரிமம் கேட்டு நிலுவையில் உள்ள மனுக்கைள சட்டப்படிபரிசீலித்து 8 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும். விதிமுறைகளைகண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத யாருக்கும் தடையில்லாசான்றிதழோ, தற்காலிக உரிமமோ வழங்கக் கூடாது.
விதிமுறைகளை பட்டாசுக் கடை போட்டிருப்பவர்கள், விற்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம். அவர்கள் வைத்திருக்கும்பட்டாசுகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களில் காலிமைதானங்களில் வைத்து பட்டாசுகள் விற்பனைசெய்யப்படுகின்றன. அதேபோல சென்னை நகரிலும் திறந்தவெளிமைதானத்தில் பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதிவழங்குவது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையரும்,மாநகராட்சி ஆணையரும் சேர்ந்து பரிசீலித்து முடிவெடுக்கலாம்என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications