முரசு: தேமுதிக மனுவைப் பரிசீலிக்க உத்தரவு
சென்னை:
உள்ளாட்சி தேர்தல் சின்ன விதிமுறைகளின் கீழ் தேமுதிக, ஜனதாஆகிய கட்சிகள் சின்னம் கோரி தாக்கல் செய்துள்ளவிண்ணப்பங்களை பரிசீலனை செய்யுமாறு மாநில தேர்தல்ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான சின்னங்களில் முரசு சின்னமும், ஏர்உழவன் சின்னமும் இடம் பெறவில்லை. இதையடுத்து முரசுசின்னத்தை தங்களது கட்சிக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி தேமுதிகசார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தனும், ஏர்உழவன் சின்னம் கோரி ஜனதாக் கட்சி சார்பில் அதன் தலைவர்சுப்ரமணியம் சாமியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.இந்த மனுவை நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர்விடுதலை, இரு கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அல்ல.இவர்களுக்கு சுயேச்சை சின்னங்களைத்தான் ஒதுக்க முடியும்.
ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்டோர் கேட்டால் குலுக்கல்முறையில் சின்னங்களை முடிவு செய்வோம் என்றும் அவர்வாதாடினார். இதையடுத்து தேமுதிக வழக்கறிஞர் வாதிடுகையில்,முரசு சின்னம் இல்லாவிட்டால் தீபம் சின்னத்தை ஒதுக்க வேண்டும்என்று வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்,உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் சின்ன விதிமுறைகளின்கீழ் இரு கட்சிகளும் சின்னம் கோரி தாக்கல் செய்துள்ளவிண்ணப்பங்களைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications