ஜிப்மர் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
புதுச்சேரி:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த 22 நாட்களாக நடந்து வந்த புதுச்சேரி ஜிப்மர்மருத்துவமனை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதன் மூலம் ஜிப்மரில்வழக்கமான நிலை திரும்பியது.
ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதை எதிர்த்து ஜிப்மர்ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.இதனால் முதல் சில நாட்கள், ஜிப்மர் மருத்துவமனை முற்றிலும் ஸ்தம்பித்தது. இதைத் தொடர்ந்து தற்காலிகஊழியர்களை நியமிக்கும் பணியில் ஜிப்மர் நிர்வாகம் இறங்கியது. மேலும், வேலைக்கு வராத பலர் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிலாளர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைவிசாரித்த உயர்நீதிமன்றம், இனிமேல் ஸ்டிரைக்கில் ஈடுபட மாட்டோம் என எழுதிக் கொடுக்கும் ஊழியர்களைமீண்டும் பணியில் சேர்க்கலாம் என உத்தரவிட்டது.
மேலும், ஜிப்மர் ஊழியர்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு விட்டு பணியில் சேருமாறும்உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தைக் கைவிடுவதாக ஜிப்மர்தொழிலாளர் போராட்ட கமிட்டி தலைவர் ஆரோக்கியம் கலைமதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உயர்நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று எங்களது போராட்டத்தை வாபஸ்பெறுகிறோம். அனைத்து ஊழியர்களும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது குறித்து ஜிப்மர் இயக்குநருடன்பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார் கலைமதி.இதன் மூலம் கடந்த 22 நாட்களாக நடந்து வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications