இடைத் தேர்தல் திருப்பம் தரும்: பிரேமலதா
மதுரை:
எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் திருப்பம் தந்தது போல மதுரை மத்தியதொகுதி விஜயகாந்த்துக்கும், தேமுதிகவுக்கும் முக்கிய திருப்பமாகஅமையும் என்று விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் தேமுதிக சார்பில் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விஜயகாந்த்தின்மனைவி பிரேமலதா மதுரையில் நேற்று பிரசாரம் செய்தார்.இத்தொகுதியை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற வெறியில்தேமுதிகவினர் படு தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.பன்னீர் செல்வத்தை ஆதரித்து பிரேமலதா நேற்று தீவிரப் பிரசாரம்மேற்கொண்டார்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பிரேமலதாபிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், திண்டுக்கல் இடைத் தேர்தல்எம்.ஜி.ஆருக்கு அன்று திருப்பு முனையைக் கொடுத்தது.அதேபோல மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல்,விஜயகாந்த்துக்கும், தேமுதிகவுக்கும் திருப்புமுனையாக அமையும்.
இந்தத் தேர்தலில் கிடைக்கப் போகும் வெற்றியின் மூலம்தேமுதிகவுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்றார் பிரேமலதா.பிரசாரத்தின்போது ஏராளமான பெண்கள், பிரேமலதாவுக்கு ஆரத்திஎடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
பிரேமலதாவின் பேச்சைக் கேட்க பெரும் திரளான மக்கள்கூடியிருந்தனர்.
இதேபோல 41வது வார்டு மாநாகராட்சி கவுன்சிலர் தேர்தலில்போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகுலட்சுமியை ஆதரித்தும்பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டார்.
கேப்டன் 13 நாள் சுற்றுப்பயணம்:
இதற்கிடையே தேமுதிக தலைவரான நடிகர் விஜயகாந்த்தின் தேர்தல்பிரசார சுற்றுப்பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தன்வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலுக்காகவும்,மதுரை மத்தி இடைத் தேர்தலுக்காகவும் அக்டோபர் 1ம் தேதி முதல்13ம் தேதி வரை 13 நாட்களுக்கு திறந்த வேனிலும், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு தீவிர பிரசாரம் செய்யவுள்ளார்.
1ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னைமாநகரில் வேன் மூலம் பிரசாரம். இரவு 7 மணி தாம்பரத்தில்பொதுக் கூட்டம். 2ம் தேதி மதியம் 1 மணி விருத்தாச்சலம், மாலை4 மணி உளுந்தூர்ப்பேட்டை, இரவு 7 மணி ஆத்தூர் ஆகியஇடங்களில் பொதுக் கூட்டம்.
அக்டோபர் 3ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை சேலத்தில் பிரசாரம். மாலை 3 மணி ராசிபுரம், 5 மணி ஈரோடு,இரவு 7 மணி அவினாசியில் பொதுக் கூட்டங்கள்.
4ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை கோவையில்பிரசாரம். மாலை 4 மணி திண்டுக்கல், இரவு 7 மணி கரூரில் பொதுக்கூட்டம். 5ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை திருசசியில்பிரசாரம். மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை மதுரை மத்தியதொகுதியில் இடைத் தேர்தல் பிரசாரம்.
6ம் தேதி முதல் 8ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 10மணி வரை மதுரை மத்திய தொகுதியில் வேன் மூலம் பிரசாரம்.9ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரைமத்திய தொகுதியில் வேன் மூலம் பிரசாரம். இரவு 7 மணி தேனியில்பொதுக் கூட்டம்.
10ம் தேதி காலை 11 மணி விருதுநகர், மதியம் 2 மணி வள்ளியூர்,மாலை 4 மணி நாகர்கோவில், இரவு 6 மணி தூத்துக்குடியில்பொதுக் கூட்டங்கள்.
11ம் தேதி காலை 11 மணி பரமக்குடி, மதியம் 1 மணி காரைக்குடி,மாலை 4 மணி அறந்தாங்கி, இரவு 7 மணி பட்டுக்கோட்டைபொதுக் கூட்டங்கள்.
12ம் தேதி மாலை 3 மணி திருவாரூர், மாலை 5 மணிமயிலாடுதுறை, இரவு 7 மணி சிதம்பரம் ஆகிய இடங்களில்பொதுக் கூட்டம்.
13ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கடலூர்மாவட்டத்தில் வேன் மூலம் பிரசாரம். மாலை 3 மணி கடலூரில்பொதுக் கூட்டம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications