பட்டாசு விபத்து பலி 4 ஆக உயர்வு
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசுத்தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் இறந்தவர்களின்எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி அருகே சாத்தூர் செல்லும் சாலையில், மீனாம்பட்டி என்றஇடத்தில் ஜெயராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுத்தொழிற்சாலை உள்ளது. இங்கு தீபாவளியையொட்டி பட்டாசுத்தயாரிக்கும் பணி படு மும்முரமாக நடந்து வருகிறது.மொத்தம் 40 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர்.நவீன பட்டாசுகள் தயாரிக்கும் அறைகளில் நேற்று பிற்பகலில்பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் 27 அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. அங்கு வேலைபார்த்துக் கொண்டிருந்த ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் சிதறிஓடினர். இந்த விபத்தில் சிக்கி மாரீஸ்வரி (19), செல்வி (45),பாக்கியம் (50) ஆகிய 3 தொழிலாளர்கள் பரிதாபமாகஉயிரிழந்தனர். இந்த விபத்தில் பாக்கியநாதன் (30) என்பவரும்உடல் கருகிய நிலையில் பின்னர் கண்டெடுக்கப்பட்டார்.
8 பெண்கள் உள்பட 13 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் மதுரை அரசு ராஜாஜிமருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர்பார்வையிட்டார். மேலும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவியும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000உதவி, லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 6000 நிதியுதவியுயம்அவர் அறிவித்தார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் விருதுநகர் அரசு மருத்துவனைக்கு சென்றுகாயமடைந்து அனுமதிக்கப்பட்டவர்களை பார்த்து நலம்விசாரித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications