யானைதான் குறி, முயல் அல்ல!: கருணாநிதி
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலிலும், மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுகவைகுறி வைத்து வீழ்த்த வேண்டும் என்று திமுகவினருக்கு முதல்வர் கருணாநிதிஅறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:உள்ளாட்சித் தேர்தல், அதற்கிடையே மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் ஆகியஇரு களங்களில் எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று வெத்து வேட்டுச்செய்திகளை முழக்கங்களாக்கி, நம் மீது மோதுகிற கட்சிகளிலேயே நம் கண்ணுக்குத்தெரிகிற கட்சியாக இருப்பது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக.
நாம் தனிப்பட்ட முறையில் மாத்திரமல்ல, நமது எதிரியை தத்துவ ரீதியாகவும்,கொள்கை ரீதியாகவும், இனம் பிரித்து அடையாளம் கண்டு அடைந்தே தீருவதுவெற்றியென்று அரிமாக்களாக சிலிர்த்து நிற்கிறோம்.
இவர்கள் நாடாண்ட அழகு இன்னும் வாக்காளப் பெருமக்களின் வைராக்கியம்நிறைந்த உள்ளத்திலிருந்து விலகாமல் இருக்கிறதே, இது ஒன்று போதாதா இவர்களின்வீழ்ச்சிக்கு. இவர்களை வீழ்த்துவதற்கு அரசு ஊழியர்கள் வேறு ஆயுதம் தாங்கவேண்டுமா?
நாம் அடையவிருக்கிற வெற்றிக்கு ஆதரவாக, இதோ திருமாவளவன் தலைமையில்விடுதலைச் சிறுத்தைகளும் நமது அணிவகுப்பில்.
மதுரை இடைத் தேர்தலில் சட்டமன்றத்தில் இஸ்லாமிய இளஞ்சிங்கம் கவுஸ்பாட்சாவை உட்கார வைத்திட, கடந்த ஜூன் மாதம் முதல் மூன்று, நான்கு மாதமாகநடைபெறுகிற நமது ஆட்சியின் சாதனைகளும், திட்டங்களும் தேர்தல்வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற திறனும், போதுமானவையென்று நம்புகிறோம்.
கான முயலெய்த அம்பினில் யாழை பிழைத்தவேல் ஏந்தல் இனிது என்று ஒரு குறள்உள்ளது. அதாவது, சரியாக குறி வைத்து முயலை வீழ்த்தி விடலாம். ஆனால்யானைக்குக் குறி வைத்து அது குறி தப்பினாலும் அது பெருமைக்குரியது என்கிறார்வள்ளுவர்.
நன்னிலங்களை, பயிர் பச்சைகளை, வாழை, மா, பலாக்களை நாசப்படுத்தும்யானையை வேட்டையாடி, வீழ்த்திட எடுக்கும் முயற்சிதான் பாராட்டுக்குரியது. அதைவிடுத்து சரியாக குறி பார்த்து முயலை வேட்டையாடுவதால் என்ன பயன், ஏதுபாராட்டு?
இந்தத் தேர்தலிலும் நாம் வீழ்த்திட வேண்டியது மதம் கொண்ட யானையைத்தான்,பாவம், சிறு முயலை அல்ல. இது நமக்கு எதிரியுமல்ல என்பதை உணர்ந்துமக்களுக்கு, ஜனநாயக மாண்புக்கு, நிர்வாக நேர்மைக்கு, உண்மையான பகையாகவிளங்கும் தீய சக்தியை வீழ்த்த திரளுவோம். முயல்களை விட்டு விட்டு யானைக்குகுறி வைப்போம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications