ஐ.நா: தெ.கொரியாவுக்கு இலங்கை ஆதரவு!
கொழும்பு:
ஐ.நா. பொதுச் செயலாளர் தேர்தலில் தென் கொரியா வேட்பாளரான பாங் கி மூனுக்கு இலங்கை தனது ஆதரவைதெரிவித்துள்ளது. இதற்கு வசதியாக இலங்கையின் சார்பில் போட்டியிட்ட ஜெயந்த தனபாலா போட்டியிலிருந்துவிலகியுள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பாங் கி மூன், இந்தியாவின் சசி தரூர்உள்ளிட்ட 9 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் இலங்கையின் சார்பில் போட்டியிட்ட ஜெயந்த தனபாலாவும்ஒருவர். தற்போது தனபாலா போட்டியிலிருந்து விலகியுள்ளார்.தென் கொரிய வேட்பாளர் பாங் கி மூனுக்கு ஆதரவாக போட்டியிலிருந்து விலகுவதாக தனபாலாதெரிவித்துள்ளார். பொதுச் செயலாளர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து தனபாலா விலகுவது குறித்து இலங்கைவெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதில், தென் கொரிய வேட்பாளர் பாங் கி மூனின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தனபாலாபோட்டியிலிருந்து விலக முடிவு செய்யப்பட்டது. ஆசியாவைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் போட்டியின்றித்தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தனபாலா போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
தற்போது போட்டியில் முன்னணியில் உள்ள வேட்பாளருக்கு இலங்கை தனது ஆதரவைத் தெரிவிக்கிறது என்றுகூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கை தனது ஆதரவை பாங் கி மூனுக்கு தெரிவித்துள்ளது. மேலும், இந்திய வேட்பாளர் சசிதரூரை இலங்கை ஆதரிக்காது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது இந்த அறிக்கை.
இதுவரை நடந்த 3 மாதிரி தேர்தல்களில் தனபாலாவுக்கு சாதகமாக ஒரு ஓட்டு கூட விழவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல்களில் பாங் கி மூன் தொடர்ந்து முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்து 2வதுஇடத்தில் இந்தியாவின் சசி தரூர் உள்ளார்.
2வது இடத்தில் சசி தரூர் இருந்தாலும் கூட தீவிரமாக முயற்சித்தால் பாங் கி மூனை பின்னுக்குத் தள்ளி அவர்முதலிடத்திற்கு வர முடியும் என்று ஐ.நா. வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications