வாலி வீட்டில் புகுந்த நல்ல பாம்பு!
சென்னை:
கவிஞர் வாலியின் வீட்டினுள் மிகப் பெரிய நல்ல பாம்பு புகுந்தது. அதைதீயணைப்புப் படை வீரர்கள் பிடித்தனர்.
கவிஞர் வாலியின் வீடு சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கற்பகம் அவென்யூவில்உள்ளது. நேற்று காலை வாலியின் வீட்டினுள் 4 அடி நீளமுடைய நல்ல பாம்பு புகுந்துவிட்டது.பாம்பு உள்ளே புகுவதைப் பார்த்த வாலியின் மனைவி பயத்தில் அலறினார்.வெளியே ஓடி வந்த அவர் நல்ல பாம்பு வீட்டுக்குள் புகுந்து விட்டதாக கூறி அக்கம்பக்கத்தினரின் உதவியைக் கோரினார். ஆனால் நல்ல பாம்பை எப்படிப் பிடிப்பதுஎன்ற பயத்தில் அக்கம் பக்கத்தினர் உதவ தயங்கினர்.
இந்த நிலையில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு, குளியலறைக்குள் நுழைந்தது.இதையடுத்து வாலியும், வீட்டில் இருந்த மற்றவர்களும் குளியலறைக் கதவை மூடினர்.அதன் பின்னர் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் விரைந்துவந்தனர். குளியலறையில் பாம்பு எங்கே ஒளிந்திருக்கிறது என்பதை அவர்கள்தேடினர். ஆனால் பாம்பு கண்ணில் படவில்லை.
இதையடுத்து பேசினுக்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகித்த அவர்கள் அதற்குள்குழாய் மூலம் தண்ணீரை வேகமாக பாய்ச்சினார்கள். தண்ணீரைப் பார்த்த பாம்பு,மெதுவாக தலையை நீட்டியது.
இதையடுத்து பாம்பின் வாலைப் பிடித்து அதை வெளியே தூக்கிப் போட்டனர்தீயணைப்பு வீரர்கள். பின்னர் பாம்பின் மீது தண்ணீரைப் பாய்ச்சி அது வேகமாக நகரமுடியாத படி செய்தனர். தண்ணீராக இருந்ததால் பாம்பால் வேகமாக செல்லமுடியவில்லை.
இதையடுத்து ஸ்ரீபதி என்ற வீரர் பாமம்பின் தலையை லாவகமாக பிடித்து தூக்கினார்.சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பாம்பு பத்திரமாக பிடிபட்டது.இதையடுத்து வாலி குடும்பத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications