சென்னை-சிக்கலில் திமுக: சிபிஎம் தனித்து போட்டி
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதிமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்டஅறிக்கையில்,சென்னை மாநகராட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவிரும்பிய 18 வார்டுகளுக்கான பட்டியலை வட சென்னை மற்றும் தென் சென்னைமாவட்ட திமுக செயலாளர்களிடம் கொடுத்தோம்.
ஆனால் கடைசி வரை திமுக தரப்பிலிருந்து எங்களை பேச்சுவார்த்தைக்கேஅழைக்கவில்லை. தென் சென்னை மற்றும் வட சென்னை மாவட்ட திமுகசெயலாளர்கள் எங்களை பொருட்படுத்தவும் இல்லை.
இந் நிலையில் 2 இடங்கள் மட்டும் ஒதுக்கப்படுவதாக தகவல் கிடைத்தது.தன்னிச்சையாக அறிவித்த முறை மற்றும் 2 இடங்கள் மட்டும்தான் என்பதையும்எங்களால் ஏற்க முடியவில்லை.
திமுகவின் இந்த செயல்பாடு, கூட்டணி தத்துவத்திற்கு முரண்பாடானதாகும். இதைதிமுக தலைமையிடம் தெரிவித்து விட்டோம். 30ம் தேதி வரை சுமூக உறவுக்குமுயற்சித்தோம். ஆனால் திமுக அணுகுமுறை அதற்கு உதவிடவில்லை.
எனவே தவிர்க்க இயலாத சூழ்நிலையில் 8 வார்டுகளில் தனித்துப் போட்டியிட முடிவுசெய்துள்ளோம். 59வது வார்டில் தேவி, 35வது வார்டில் பாண்டியன், 12வது வார்டில்ஷாஜகான், 45வது வார்டில் ரேணுகாதேவி, 103வது வார்டில் சரளா, 69வது வார்டில்சரஸ்வதி, 130வது வார்டில் அழகு, 142வது வார்டில் சரோஜா ஆகியோர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications