சென்னை வந்தது மலேசியாவில் இறந்தவர் உடல்
சென்னை:
மலேசியாவில் சமையல் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் இறந்த தமிழகவாலிபரின் உடல் 67 நாள் போராட்டத்திற்குப் பின்னர் நேற்று சென்னை கொண்டுவரப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர்சிவகாமி. இவரது மகன்கள் தம்பித்துரை, தங்கதுரை.கணவரை இழந்த சிவகாமி, 15 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு இடம்பெயர்ந்தார். அங்கு சரோஜா என்பவர் வீட்டில் வேலை பார்த்து வந்தார்.
சிவகாமியின் இளைய மகன் தங்கதுரையை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்சமையல் வேலை பார்ப்பதற்காக சரோஜா அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு சென்றபின்னர் அவருக்கு ஹெல்ப்பர் (உதவியாளர்) வேலைதான் தரப்பட்டது. தண்ணிமலைஎன்பவர் வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார் தங்கதுரை.
கடந்த ஜூலை 30ம் தேதி சிவகாமி குடும்பத்திதற்கு மலேசியாவிலிருந்து ஒரு தகவல்வந்தது. தங்கதுரை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்தெரிவித்தது.
இதைக் கேட்டதும் சிவகாமியும், தம்பித்துரையும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களதுமகனின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பப்படும் என அவர்கள் காத்திருந்தனர்.ஆனால் உடல் வரவில்லை. இதனால் அவர்களுக்கு தங்கதுரையின் மரணம் குறித்துசந்தேகம் எழுந்தது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்டனர்.
இதையடுத்து உடலைப் பெற தீவிர முயற்சிகள் எடுத்தனர். ஆனால் எந்தப் பலனும்ஏற்படவில்லை. இதையடுத்து தம்பித்துரை சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்.உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, தங்கதுரையின் உடலை தமிழகத்திற்குக்கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் தங்கதுரையின் உடல் விமானம்மூலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. 67 நாள்கழித்து தங்கதுரையின் உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
உடலை தங்கதுரையின் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தபோது, அதைபெற அவர்கள் மறுத்தனர்.
தங்களது மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதால்தங்கதுரையின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றுஅவர்கள் கோரினர். இதையடுத்து உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் உடல் தங்கதுரையின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.உடலைப் பெற்றுக் கொண்ட தங்கதுரையின் அண்ணன் தம்பித்துரை, தனது தம்பியின்உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications