முதியவருக்கு காக்கிகள் காட்டிய கருணை
சென்னை:
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக் கிடங்குக்கு அருகேஅனாதரவாக விடப்பட்ட முதியவர் ஒருவரை மீன் பாடி வண்டியில் தூக்கிப் போட்டுஅவரை மேம்பாலத்திற்குக் கீழே போட்டு விட்டு சென்றனர் போலீஸார்.
அந்த முதியவர் திமுக பேச்சாளராக இருந்து இப்போது, நாதியின்றி இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.ராயப்பேட்டை மருத்துவமனை சவக்கிடங்கு அருகே ஒரு முதியவர் குப்பைகளுக்குமத்தியில் அனாதராவாக கிடந்தார். அவரைப் பார்த்த சில நிருபர்கள், உடனேகாவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸார் வந்து அந்த பெரியவரை மீட்டு ஏதாவது காப்பகத்தில் சேர்ப்பார்கள்அல்லது மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார்கள் என்று நிருபர்கள்எதிர்பார்த்தனர்.
சிறிது நேரத்தில் 2 போலீஸார் அங்கு வந்தனர். கூடவே ஒரு மீன் பாடி வண்டியையும்கூட்டி வந்தனர். தரையில் கிடந்த பெரியவரை தூக்கி அந்த வண்டியில் போட்டனர்.பின்னர் மீன் பாடி வண்டிக்காரரின் காதில் எதையோ கிசுகிசுத்தனர். பின்னர் போய்விட்டனர்.
பெரியவரை தூக்கிக் கொண்டு மீன்பாடி வண்டிக்காரர் ராயப்பேட்டை மேம்பாலம்பகுதிக்கு சென்றார். மேம்பாலத்திற்குக் கீழே உள்ள நடைமேடையில் இறக்கி விட்டுவிட்டு அப்படியே கிளம்பி விட்டார்.
இதை பின் தொடர்ந்து சென்று பார்த்த பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பெரியவரிடம் செய்தியாளர்கள் பேசியபோது, சிகிச்சைக்காகராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தேன். ஆனால் பணம் கேட்டு என்னைகொடுமைப்படுத்தினர். என்னிடம் பணம் இல்லை. இதனால் என்னை தூக்கி வெளியேபோட்டு விட்டனர். இப்போது போலீஸாரும் என்னை சாலையில் போட்டு விட்டுச்சென்று விட்டனர் என்று புலம்பினார்.
அவரது நிலையை அறிந்த அப் பகுதி அதிமுகவினர் முதியவரை தொண்டு நறுவனம்ஏதாவது ஒன்றில் சேர்க்க முயற்சி மேற்கொண்டனர். இந் நிலையில் அங்கு விரைந்துவந்த போலீஸார் சிலர் முதியவரை ஸ்டிரெச்சரில் வைத்து மீண்டும் ராயப்பேட்டைஅரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பின்னர் அந்த முதியவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் மீண்டும்சேர்க்கப்பட்டார். அந்த பரிதாப பெரியவர் குறித்த தகவல்கள் தற்போதுவெளியாகியுள்ளன. பரிதாபத்துக்குரிய அந்த முதியவரின் பெயர் அப்துல் ரகுமான்.திமுகவைச் சேர்ந்தவர். கவிஞரான அவர் திமுக பேச்சாளராக இருந்தவர்.
அப்துல் ரகுமானுக்கு கவிஞர் இடிமுரசு என்றுதான் திமுக வட்டாரத்தில் பெயராம்.இடிமுரசு என்ற பெயரை வைத்ததே திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதிதான் என்று அப்துல் ரகுமானின் மனைவி மெஹபூபி கூறினார்.
அவர் கூறுகையில், எங்களது குடும்பமே திமுக தான். திமுகவின் வளர்ச்சிக்காகநாங்கள் ஓடாக உழைத்துள்ளோம். எனது கணவருக்கு இடிமுரசு என கலைஞர்தான்பெயர் சூட்டினார்.
இன்று கேட்க நாதியில்லாமல், நடுச் சாலையில் எனது கணவரை போலீஸார் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர் என்று கூறி கதறி அழுதார் மெஹபூபி. தற்போது கவிஞர்அப்துல் ரகுமானுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications