சச்சின் ஆட்டத்தால் இந்தியா ப்ளூ வெற்றி
சென்னை:
சென்னையில் நடந்து வரும் சேலஞ்சர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் அடித்த அபாரசதத்தால் இந்தியா ப்ளூ அணி வெற்றி பெற்றது.
இந்தியா ப்ளூ, ரெட் மற்றும் க்ரீன் அணிகளுக்கிடையிலான சேலஞ்சர் கோப்பைக் கிரிக்கெட் போட்டிசென்னையில் நிடந்து வருகிறது. டிராவிட் தலைமையிலான ப்ளூ அணியும், முகம்மது கைப் தலையிைலான கிரீன்அணியும் மோதின.தலில் ஆடிய ப்ளூ அணி அபாரமாக ஆடி 381 ரன்களைக் குவித்தது. சச்சின் டெண்டுல்கர் 100 பந்துகளில் 139ரன்களைக் குவித்தார். இதில் 2 சிக்சர்களும், 16 பவுண்டரிகளும் அடங்கும்.
கேப்டன் டிராவிட் 62 ரன்களும், டோணி 79 ரன்களும் குவித்தனர். இர்பான் பதான் சிறப்பாக ஆடி 54 ரன்களைஎடுத்தார். கிரீன் அணி சார்பில் எல்.பாலாஜி 2 விக்கெட்டுகளை எடுத்தார். பையூஷ் சாவ்லா, லாஹிரி ஆகியோர்தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் விளையாடிய கிரீன் அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது. அந்த அணி சார்பில் விளையாடியமுன்னாள் இந்திய கேப்டன் கங்குலியின் ஆட்டம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.ஆனால் ஏமாற்றம் அளிக்கும் வகையில் விளையாடிய கங்குலி 24 ரன்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.
பார்த்திவ் படேல் 43 ரன்களும், ஹேமங் பதானி 20 ரன்களும், வாசிம் ஜாபர் 12 ரன்களும் எடுத்தனர். மற்றவீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஆட்ட நேர இறுதியில் 115 ரன்களில் சுருண்டது கிரீன். இதன்மூலம் 226 ரன்கள் வித்தியாசத்தில் டிராவிட் தலைமையிலான ப்ளூ அணி வெற்றி பெற்றது.
இன்று கங்குலி இடம் பெற்றுள்ள கிரீன் அணியும், வேணுகோபால் ராவ் தலைமையிலான ரெட் அணியும்மோதுகின்றன. இதிலும் கங்குலி சரியாக விளையாடவிட்டால் இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்புஅவருக்கு மேலும் மங்கும் ஆபத்து உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications