ஐநா பொது செயலாளர் தேர்தல்-தரூர் விலகல்
ஐ.நா. சபை:
ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட இந்தியாவின் சசி தரூர், தனக்கு தோல்வி உறுதி என்றுதெரிய வந்ததால் அந்தப் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து தென் கொரியாவின்பான்-கி-மூன் ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகிறார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னாணின் பதவிக் காலம் டிசம்பர் மாதம் முடிவடைகிறது. ஜனவரியில் புதியபொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்.இதையடுத்து இந்தப் பதவியைப் பிடிக்க பல நாடுகள் முயன்றன. 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்புநடத்தப்பட்ட பல சுற்று ரகசிய வாக்கெடுப்பில் தென் கொரியாவின் பான்-கி-மூனும், இந்தியாவின் சசி தரூரும்தான் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.
முதல் இரண்டு சுற்றுகளில் மூன், தரூர் ஆகியோர் இடையே வாக்கு இடைவெளி மிகக் குறைவாக இருந்தது.ஆனால், மூன்றாவது சுற்றில் மூன் மிக அதிக வாக்குகள் பெற்றார்.
இதையடுத்து போட்டியிலிருந்து விலகுவதாக தரூர் அறிவித்துவிட்டார். பொதுச் செயலாளர் தேர்தலுக்கானஅதிகாரப்பூர்வ வாக்குப் பதிவு அடுத்த வாரம் நடக்கவுள்ளது.
15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபை யாரை வேட்பாளராக இறுதி செய்கிறதோ அவரையே 192நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையும் தேர்ந்தெடுப்பது மரபாக இருந்து வருகிறது.
இதனால் தென் கொரியாவின் பான்-கி-மூன் வெல்வது உறுதியாகிவிட்டது.
இந்தப் பதவிக்கு போட்டியிட்ட சசி தரூர் மலையாளி ஆவார். அமெரிக்காவில் வளர்ந்த தரூர் ஐ.நா. பொதுச்சபையில் செய்தித் தொடர்பு பிரிவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார் தரூர்.
ஐ.நா. பொதுச் செயலாளராகப் போகும் பான்-கி-மூன் தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சராக உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications